10/30/2018

துறவி கில்லஸ் (ஏகிடியுஸ்) Gilles (Ägidius) - பாதுகாவல்: பிச்சைக்காரர்கள், புற்று நோயாளிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், வலிப்பு, மன நோயாளிகள்

இவரின் கிரேக்கப்பெயர்: ஏகிடியுஸ் (Ägidius). ஜெர்மானியப்பெயர்: ஷில்டுஹால்டர் (Schildhaltar). பிரெஞ்ச் பெயர்: கி
ல்லஸ் (Gilles) இவர் ஓர் துறவி. இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரோன்(Rhone) என்ற ஆற்றின் அருகே புனிதராக வாழ்ந்துள்ளார். இவர் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு துணையாக மான் ஒன்று இருந்திருக்கிறது. இவர் காட்டில் வாழ்ந்தபோதும் சைவ உணவு மட்டுமே உட்கொண்டுள்ளார். 

அரசர் ஒருவர் காட்டில் வேட்டையாட வந்தார். அப்போது கில்லசுக்கு சொந்தமான மானை வேட்டையாட அம்பு எறிந்துள்ளார். அம்பானது மானில் பாய்ந்தும், அடிபடாமல் இருந்தது. இதைக் கண்ட கில்லஸ் மானை குத்திய அம்பை பிடுங்கி எறிந்துவிட்டார். இவற்றை பார்த்த அரசர் கில்லசின் புனிதத்துவ வாழ்வை அறிந்தார். அவரை பின்பற்ற விரும்பினார். அவரின் வழியில் செல்ல கடினமாக இருந்தபோதும் முயற்சி செய்தார். கில்லசின் பெயரால் அக்காட்டில் மடம் ஒன்றை கட்டினார். 

கில்லஸ் தன் ஏழ்மையான வாழ்வின் வழியாக காட்டை சுற்றி வாழ்ந்த மக்களை மனந்திருப்பினார். நல்வாழ்வை வாழ கற்பித்தார். காட்டிலிருந்த தாவரங்களைக்கொண்டு, மக்களின் நோய்களை குணமாக்கினார். காட்டில் வாழ்ந்த விலங்குகள் இவரின் புனிதத்துவத்தைக் கண்டு, இவரை சந்திக்க வந்து சென்றது. இவர் பல மடங்களை அரசரின் உதவி கொண்டு கட்டினார். பல துறவிகளை உருவாக்கினார். இவர் வாழ்ந்த வாழ்வையே, இவரின் மடத்துறவிகளும் வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு, பிரான்சு நாட்டிலிருந்து எடுத்துச் சென்று காட்டில் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை இன்று யாத்திரை தலமாக உள்ளது. 
செபம்:
காடு, மரம், பறவைகள், வனவிலங்குகள் என்று இயற்கையோடு வாழ்ந்து, இறைவனை போற்றிய துறவி கில்லஸைப்போல நாங்களும் இயற்கையை போற்றி பாதுகாக்க வரம் தாரும். நீர் படைத்த இந்த அழகான உலகை மென்மேலும் அழகூட்டி உம்மை மகிமைப்படுத்துவேன். ஆமென்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பிறந்ததும், 'பிறக்காதவர்' என்ற பெயர் பெற்றவர் - (St Raymond Nonnatus) 
1204ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் போர்டெல்லா (Portella) என்ற ஊரில் பிறந்தவர் ரெய்மண்ட் (Raymond). இவர் பிறந்ததும், 'பிறக்காதவர்' என்று பொருள்படும் 'Nonnatus' என்ற பெயர் இவருக்குச் சூட
்டப்பட்டது. இவரது தாய், பிரசவ நேரத்தில் இறந்ததால், குழந்தை ரெய்மண்டை தாய் உதரத்திலிருந்து 'செசேரியன்' முறையில் வெளியே கொணர்ந்தனர். இயல்பான வழியில் இவர் பிறக்காததால், 'பிறக்காதவர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. 
'கருணையின் சபை' என்றழைக்கப்படும் துறவுச் சபையில் இணைந்த ரெய்மண்ட் அவர்கள், பார்பரி என்ற கடற்கரைப் பகுதியில் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்குச் சென்றார். தான் எடுத்துச் சென்ற செல்வங்களைக் கொடுத்து, கிறிஸ்தவர்களை விடுவித்தார். இவர் கொண்டு சென்ற செல்வங்கள் அனைத்தும் தீர்ந்தபின், இவர் தன்னையே ஒரு பிணையக் கைதியாகக் கொடுத்து, மேலும் சிலரை விடுவித்தார்.
கைதியாக இருந்த வேளையில், சிறையிலிருந்தபடியே கிறிஸ்துவைப் பற்றி போதித்தார். அதைக் கேட்ட பல கைதிகளும், சிறை அதிகாரிகளும் கிறிஸ்தவர்களாக மாறினார். இதனால் ஆத்திரமடைந்த எனைய அதிகாரிகள், இவரது உதடுகளில் துளையிட்டு, அவற்றைப் பிணைத்து ஒரு பூட்டு மாட்டினர். இவரது துறவுச் சபையைச் சேர்ந்தவர்கள் இவருக்குரிய பிணையத் தொகையைச் செலுத்தி, இவரை விடுவித்தனர். 
இவரது புகழ் ஸ்பெயின் நாடெங்கும் பரவியதால், 1239ம் ஆண்டு இவர் இறந்ததும், இவரது உடலை எங்கே புதைப்பது என்ற பிரச்சனை எழுந்தது. எனவே, இவரது இறந்த உடலை, பார்வையற்ற ஒரு கோவேறு கழுதைமீது கிடத்தி, ஊருக்குள் அவிழ்த்துவிட்டனர். இவர் இளவயதில் அடிக்கடி சென்று வேண்டிவந்த சிறு கோவிலுக்கு அவரது உடலைச் சுமந்து சென்றது அந்தக் கோவேறு கழுதை. எனவே, ரெய்மண்ட் அவர்கள் அக்கோவிலில் புதைக்கப்பட்டார். 
1657ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்ட ரெய்மண்ட் நோன்நாத்துஸ் (St Raymond Nonnatus) அவர்களின் திருநாள் ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. செசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX



புனித அகுஸ்தீன்/ அகுஸ்தினார் / அகஸ்டீன் St.Augustine - ஆயர், மறைவல்லுநர்
புனித அகுஸ்தீன் தனது இளமைப் பருவத்தை தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றி கழித்தார். தன் தாய் மோனிக்காவின் இறைவேண்டலினால் மனந்திரும்பினார். பின்னர் இறைநூலைப் படி
த்தும், தன் தாயின் விருப்பப்படியும் இறைவழியில் சென்றார். 

மிலானில் மனந்திரும்பிய இவர், 387 ஆம் ஆண்டில், மிலான் ஆயர் அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். தனது 42 ஆம் வயதில் ஹிப்போ என்றழைக்கப்படும் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் தம் மந்தைக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வழங்கினார். ஏராளமான மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களை பயிற்றுவித்தார். ஏறக்குறைய 100 நூல்களுக்கும் மேல் எழுதினார். அவற்றைக் கொண்டு தம் காலத்தில் நிலவிய தவறான கருத்துக்களுக்கு எதிராக இடையறாது போராடினார். திறம்பட திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார். 
செபம்:
எண்ணங்களை கடந்து செயல்படுபவரே! உம் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். புனித அகுஸ்தீன் மனந்திரும்பி உம்மை ஏற்றுக்கொண்டு. பின்பற்றியதுபோல வழி தவறி அலையும் இளையோர்களை உம்பால் ஈர்த்து அவர்களில் உம் சித்தத்தை நிறைவேற்றிட வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மோனிக்கா Monika - புனித அகுஸ்தினாரின் தாயார் - பாதுகாவல்: கிறித்தவ பெண்கள், தாய்மார்கள்

புனித மோனிக்கா சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் (Patricius) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார். 

தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். இவர் கார்த்தேஜ்(Carthej) என்ற நகரிலிருக்கும் புனித சிப்ரியன் ஆலயத்தில் அமர்ந்து செபிக்கும்போது, தன் மகன் அகுஸ்தீன் உரோம் நகர் சென்றார். இதையறிந்த அத்தாய், மகனைக் காண ஓடோடி கப்பலேறி வந்துகொண்டிருக்கும்போது, சுகமில்லாம் இறந்துவிட்டார்.
செபம்:
துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளிப்பவரே எம் தந்தையே! தன் மகன் அகுஸ்தீனின் மனமாற்றத்திற்காக பரிவன்புடன் கண்ணீர் சிந்திய புனித மோனிக்காவைப்போல, நாங்களும் எங்கள் பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி, உமதருளால் மனமாற்றம் பெற்றிட உதவி செய்தருளும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)
லூயிஸ் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் லூயிஸ் டி லையன்(Louid de Lion). இவரின் தாய் ப்லான்சே(Blanche). இவரின் தாத்தா பிரான்சு நாட்டு அரசர் இரண்டாம் பிலிப்பு. புனித லூயிஸ் 9 
வயதாக இருக்கும்போதே, இவரின் தாத்தா இறந்துவிட்டார். இதனால் இவரின் தந்தை 8 ஆம் லூயிஸ் அரச பதவியேற்றார். 8 ஆம் லூயிசை பதவியேற்ற 3 ஆண்டுகளில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் லூயிஸ் தனது 12 வயதிலேயே நாட்டின் அரசராக பதவியேற்றார். ஒன்பதாம் லூயிஸ் என்று பெயர் பெற்றார். லூயிஸ் திருமணம் செய்து, 11 குழந்தைகளை ஆண்டவரின் ஆசீரோடு பெற்றார். தன் குழந்தைகளை தானே சிறந்த முறையில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவப் பற்றிலும், செப ஆர்வத்திலும், ஏழை எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். தன் நாட்டு மக்களின் ஆன்மீக நலத்திலும் அவர்களிடையே அமைதியை உருவாக்குவதிலும் அக்கறைகொண்டு, ஆட்சி செய்தார். கிறித்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர் மேற்கொண்டார். இவர் 1226 ஆம் ஆண்டிலிருந்து, தான் இறக்கும்வரை அரசராக இருந்தார். இவர் 1248 ஆம் ஆண்டு 7 வது சிலுவைப்போரையும், 1270 ஆம் ஆண்டு மீண்டும் 8 வது சிலுவைப்போரையும் நடத்தினார். இவர் அரசர்களிலேயே முதல் புனிதர் என்ற பெயர் பெற்றார்.
செபம்: நல்ல ஆயனாம் எம் இறைவா! பிரான்சு நாட்டில் லூயிஸ் என்ற ஓர் நல்ல அரசரைக் கொடுத்து, உம் மக்களை நீர், அவர் வழியாக உம்மால் ஈர்த்துள்ளீர். இன்றும் அரசர்களாக இருந்து ஆட்சி புரிபவர்களை நீர் வழிநடத்தியருளும். மக்களை நீதியோடும் நேர்மையோடும் ஆட்சி செய்திட உம் அருள் தருமாறு தந்தையே உம்மிடம் மன்றாடுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) Apostle Bartholomew
மறைசாட்சி
இவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் பெற்றபின் இந்தியாவிற்கு சென்று மறைப்பணி செய்தார் என்றும் சொல்லப்
படுகின்றது. இவர் பிலிப்பு என்ற சீடரின் நண்பர். இவர் ஆர்மேனிய நாட்டிற்கு சென்று, அங்கு விசுவாசத்தை பரப்பினார் என்றும், அதன்பிறகுதான் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் கூறப்படுகின்றது. 

யோவான் நற்செய்தி 1:45-50 -ல் பின்வரும் இறைவாக்குகள் இவரை பற்றி மேலும் கூறுகிறது. "பிலிப்பு நத்தனியேலை போய்ப்பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தை சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவின் அவர்" என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மை கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிட பெரியவற்றை காண்பீர்" என்றார்.
செபம்: இரக்கமே உருவான தெய்வமே! உமது விசுவாசத்தைப் பரப்பி, அதன் பலனாக தன் உயிரை ஈந்த அப்போஸ்தலர் பார்த்தலோமேயு வழியில் சென்று, உம் விசுவாசம் இவ்வுலகில் நிலைக்க, உழைப்பதற்கு நல்ல மனதை எமக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை St. Pius X - திருத்தந்தை
இவர் ஓர் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிருந்தே சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். தவறாமல் ஆலயம் சென்று திவ்விய நற்கருணையை சந்தித்து வந்தார். ஞானம் நிறைந்த இவர், ஆன்மீக காரியங்களில் இ
ரவு, பகலென்று பாராமல், அதிக அக்கறை காட்டி வந்தார். ஆலயப் பணிகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு செய்தார். பயஸ் 1858 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருத்துவ நிலைக்கு உயர்த்தப் பெற்றபின், தம் பணியை சிறப்பாக செய்தார். தம் பங்கிலிருந்த அனைத்துக்குடும்பங்களையும் சந்தித்து, கிறிஸ்துவ வாழ்வில் வளர்த்தெடுத்தார். பல மணி நேரம் ஆலயத்தில் அமர்ந்து செபித்தார். நேரம் பாராமல் பாவசங்கீர்த்தனம் கேட்டார். இவர் 1859 ஆம் ஆண்டு மாந்துவா(Manthu) நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வெனிஸ் நகரத் திருச்சபையின் தலைமை ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பிறகு 13 ஆம் சிங்கராயர்(Leo XIII) அவர்களின் மறைவுக்குப்பின் 1903 ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்தையுமே கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதை வாழ்வில் நேர்மையை கடைபிடித்து , ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து, மன உறுதியோடு நிறைவேற்றி வைத்தார். இவரின் பண்புகளால் மெய்யடியார்களிடையே கிறிஸ்துவ வாழ்வை தூண்டி வளர்த்தார். திருச்சபைக்கு ஊறு விளைவித்த தவறான கருத்துக்களுக்கு எதிராக, வீரத்துடன் நடவடிக்கை எடுத்தார். தான் பிறந்து, வளர்ந்த ஏழ்மையான வாழ்வை விடாமல் கைபிடித்து வந்தார். மிகச் சிறப்பாக இறைப்பணியை செய்த இவர், முதல் உலகப்போர் மூண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் இறைவனடி சேர்ந்தார். இவர் தனது இறுதிமூச்சுவரை கத்தோலிக்க மக்களை பாதுகாத்து, அவர்களை ஆழமான விசுவாசத்தில் வளர்த்தெடுத்தார். 
செபம்:
வல்லமை தருபவரே எம் தலைவா! புனித பத்தாம் பயசை நீர் உமது ஆசீர்வாதத்தால் நிரப்பினீர். உமது திட்டத்தை அவரில் நிறைவேற்றினீர். உம்மைப்பற்றி எடுத்துரைக்க ஞானத்தையும், அறிவாற்றலையும் தந்தீர். அவர் கற்றுக்கொடுத்தவற்றின்படி நாங்கள் வாழ, எங்களை உம் பிள்ளைகளாக ஏற்று வாழ, உமது வல்லமையிய தந்தருளும்படியாக தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித பெர்னார்டு கிலார்வாக்ஸ் Bernhard von Clairvaux - துறவி, மறைவல்லுநர்
இவர் ஓர் அரசர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் சிறந்த நன்னெறியில் இவரையும், இவரின் உடன்பிறந்தவர்களையும் வளர்த்தெடுத்தார்கள். சிஸ்டர்சியன்(Sistercien) சபையில் சேர்ந்து கடுமையான தவ வ
ாழ்வை மேற்கொண்டார். அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , சாதுவான வாழ்வை வாழ்ந்தவர். கடுமையான ஏழ்மையை தன் துறவற வாழ்வில் கடைபிடித்தார். தன் பெற்றோரின் வளர்ப்பை மறவாமல் செப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர் தன் உடன்பிறந்த சகோதரர்களும், தந்தையும் இவருடன் வாழ துறவற இல்லம் வந்து சேர்ந்தனர். 

இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கென்றிருந்த அனைத்தையுமே விற்று, மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். தனிமையான வாழ்வு, கடுமையான செபம், ஒறுத்தல் இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்ந்தனர். அப்போது பிரான்சு நாட்டில் பரவிய "ஆல்பிஜென்ஸ்" என்ற கொள்கைகளை தைரியமாக எதிர்த்தனர். பெர்நார்டு எச்சவாலையும் தைரியமாக சந்தித்தார். மிக சிறந்த கிறிஸ்துவ மக்களை உருவாக்கினார். சிலுவைப் போரில் பணிபுரிய நல்ல கிறித்தவர்களை உருவாக்கினார். இவர்கள் விசுவாசத்தில் வளர, தன்னை முழுதும் கரைத்தார். பிறகு கிளேர்வே(Clarwo) என்ற ஆதீனத்துக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகள் புண்ணியங்களை பேணி வளர்க்கும்படி, போதனைகளாலும், முன்மாதிரியாலும் சிறிய முறையில் வழி நடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் அதிகம் தோன்றியதால் ஐரோப்பா நாடு முழுவதும் பயணம் செய்தார். திருச்சபையின் அமைதி நிலவ பெரிதும் உழைத்தார். அச்சமயத்தில் இறையியலைப்பற்றியும், கடுந்தவம் பற்றியும், ஏழ்மை வாழ்வைப்பற்றியும் பல நூல்களை எழுதினார். இவரின் பயணத்தின்பியோது இவரால் தொடங்கப்பட்ட ஆதீன மடத்தில், இறைவேண்டல் செய்யும் வேளையில் இறந்தார். 
செபம்:
மூவொரு இறைவா! புனித பெர்னார்டை, உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பற்றி எரிய செய்தீர். உம் திருச்சபையில் அறிவொளியை வீசவும், அடுத்தவரின் மீது அன்பு கொள்ளவும் அவரை ஏற்படுத்தினீர். அவரைப்போல நாங்களும் உம்மால் தூண்டப்பட்டு, உமது தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க இறைவா உம்மருளை தாரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarn - ஹங்கேரியின் தேசிய புனிதர்
இவர் ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று, ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது 20 ஆம் வயதில் பவேரியா நாட்டு அரசர் புனித 2 ஆம் ஹென்றியின் சகோதரி கிசேலா(Giesela)
 என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சிபுரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார். 

இவர் அனுமதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்துவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார். 

ஸ்டீபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்கலையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்துவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். இவர் செய்த இறைப்பணியால் இவர் இறந்தபிறகும் இவரின் வலது கையானது. அழியாமல் இருந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிக சிறந்தவராக திகழ்ந்தார். 
செபம்:
முதலும் முடிவுமான இறைவா! உம்மையே முழுமுதலாக கொண்டு, உம்மை மட்டுமே தன் நாட்டு மக்களில் மையமாக வைத்து, வாழ்ந்த புனித ஸ்டீபனின் அருஞ்செயல்களை நினைத்து, உமக்கு நன்றி நவில்கின்றோம், அவர் காட்டிய இறைவழியில் அம்மக்களை நீர் எந்நாளும் உடனிருந்து வழிநடத்தியருள் வேண்டுமாய் இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv) - குரு, துறவி, மறைசாட்சி
மாக்சிமிலியன் சிறுவயதிலிருந்தே அன்னை மரியின் மீது பக்திகொண்டு வளர்ந்தார். இளம் வயதிலேயே பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். இவர் குருத்துவ பயிற்சியில் சேர்ந்து 
பயிற்சி பெறும்போது, காசநோயால் தாக்கப்பட்டார். இறையன்னையின் அருளால் மீண்டும் குணம் பெற்றார். 1918 ஆம் ஆண்டில் உரோமையில் குருபட்டம் பெற்ற இவர் அன்னை மரியாளைப்பற்றி போதித்து, மக்களிடையே அன்னை மரியின் பக்தியை வளர்த்தார். பின்னர் "மாசற்ற மரியாவின் சேனை" என்ற பெயரில் ஓர் சபையைத் தொடங்கினார். அச்சபையை பல நாடுகளில் பரப்பி, மரியன்னையின் பக்தியை பரப்பினார். இவற்றிற்காக பலரிடம் அடிகள் பட்டு, பல அவமானத்திற்கு உள்ளானார். 

மறைப்பணியாளராக ஜப்பான் நாட்டிற்கு சென்றார். அங்கு திறம்பட நற்செய்தியை பறைசாற்றினார். மீண்டும் தன் தாய் நாடான போலந்து நாட்டிற்கு திரும்பினார். அப்போது போலந்து நாடு ஹிட்லரின் ஆட்சியால் பிடிப்பட்டது. அச்சமயத்தில் மூண்ட உலகப்போரில் மாக்சிமிலியனும் ஹிட்லரிடம் பிடிபட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாழ்வின்போது தன்னுடன் இருந்த மற்றவர்களிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அம்மக்களிடம் இறையுணர்வை வளர்த்தார். அச்சமயத்தில் ஹிட்லரால் இளைஞர் ஒருவன் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டான். இவர் ஓர் திருமணமான இளைஞர். தன்னை விடுவிக்கும்படி ஹிட்லரிடம் கெஞ்சினான். ஆனால் அவன் கோரிக்கையை ஹிட்லர் ஏற்க மறுத்தான். 

இதனைக் கண்ட மாக்சிமிலியன் அவ்விளைஞனுக்கு உதவி செய்து சென்று, அவனை விடுவிக்கும்படி மன்றாடி, அவனுக்கு பதில் தன் உயிரை கொடுக்கிறேன் என்று கூறினார். கடைசியாக அவ்விளைஞனுக்குப் பதில் தம்மையே சாவுக்கு கையளித்தார். பிறருக்காக தன்னையே தியாகம் செய்தார். 
செபம்:
தியாகத்தின் மறு உருவே எம் தலைவா! உம் மக்கள் பாவ வாழ்விலிருந்து மீட்படைய நீர் சிலுவை சாவில் உம் உயிரை தியாகம் செய்தீர். தன் நண்பருக்காக உயிரை கொடுப்பது சிறந்த அன்பு என்று கூறி, மற்றவர்களுக்காக வாழ அழைத்தீர். புனித மாக்சிமிலியனும், தன்னுயிரையே மற்றவர்களுக்காக தியாகம் செய்தார். அவர்களின் முன்மாதிரியான வாழ்வை பின்பற்றி நாங்கள் வாழ எமக்கு உம் அருளை தந்தருளும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
திருந்தந்தை போந்தியானுஸ் Pontianus - மறைசாட்சி 
கி.பி. 231 ஆம் ஆண்டில் போன்சியானு உரோம் நகரில் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவர்களுக்காக பல துன்பங்களைப்பட்டார். திருச்சபையின் வளர்ச்சிக்காக இரவு, பகலென்று பாராமல் உழைத்தார். இதனால் மன்னர் மாக்ச
ிமின்(Maximean) அவர்களின் அதிருப்திக்கு ஆளானார். அதனால் 235 ஆம் ஆண்டு, இப்போலித்து என்ற பெயர் கொண்ட குருவோடு சேர்த்து மன்னரால் நாடு கடத்தப்பட்டார். திருச்சபையின் ஒழுங்குகளை கண்ணும் கருத்துமாக குரு இப்போலித்து கடைபிடித்தார். அவற்றின்படி வாழ, தான் நிறைவேற்றிய திருப்பலியின் வழியாக மக்களை தூண்டினார். இதனால் மன்னரால் தண்டிக்கப்பட்டு, இறுதியில் நாடு கடத்தப்பட்டார். அங்கே திருத்தந்தை போன்சியானும், குருவான இப்போலித்தும் இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இறைவன் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் தளரவில்லை. இதனால் மன்னன் கொடுமையான துயரங்களை கொடுத்து அனுபவிக்கவைத்தான். அங்கே மன்னன் இவர்கள் இருவரிடமிருந்தும் பதவிகளை பறித்தான். அதன்பின் கிறிஸ்துவின் பொருட்டு தங்கள் உயிரை நீத்தனர். இவர்களின் உடல், அங்கிருந்த கலிஸ்துஸ் என்ற கல்லறை சுரங்கத்தில் புதைக்கப்பட்டது. இவ்விருவருக்கும் 4 ஆம் நூற்றாண்டிலிருந்து உரோமை திருச்சபையானது வணக்கம் செலுத்தி வருகின்றது. 
செபம்:
பொறுமையின் நாயகனே எம் இறைவா! இவ்விருவருக்கும் துன்பங்களை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்தியை நீர் அளித்தீர். இவர்களை போல எங்களது வாழ்வில்வரும் சிறுசிறு துன்பங்களை பொறுமையோடு ஏற்று, உமது மக்களாக தொடர்ந்து வாழ உம் அருள் தாரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel) 
இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார். இதனால் இவர் இறைவனையே தாயாகக் கொண்டு வாழ்ந்தார். அரண்மனையில் இவர் வாழ்ந்தபோதும் கூட ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். பின்னர் இவர் தே ஷாந்த
ால் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். 6 பிள்ளைகளைப் பெற்றபின் திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து தன் கணவரை இழந்தார். பின்னர் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தப்பின்னர், தான் ஓர் துறவற சபையை தொடங்க விரும்பினார். இதனால் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தார். 

பின்னர் பிரான்சிஸ் சலேசியாரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்தெடுத்து, அவர் காட்டிய வழியில் பின்தொடர்ந்தார். அரண்மனையில் வாழ்ந்ததால் முழுமையாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட முடியவில்லை என்பதை உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறினார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். அப்போது தன் ம்கனையும் இழந்தார். அச்சமயத்தில் பிளேக் நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. ஏராளமான மக்கள் அந்நோயால் இறந்தனர். அவரின் மருமகளும் அந்நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் இன்னும் மனமுடைந்த ஜேன் பிரான்சிஸ், பிளேக் நோயால் தாக்கப்பட்ட மக்களிடையே பணிபுரிந்தார். தன் அரண்மனை சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்காக செலவு செய்தார். அப்போதுதான் பிளேக் நோயால் பாதித்தவர்களுக்கு பணிபுரிவதற்கென்றே ஓர் துறவற சபையை நிறுவினார். தன் பிள்ளைகளையும், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து இறைப்பணியை செய்தவர். ஆழ்ந்த விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டு, இடைவிடாமல் இறைபணி ஆற்றினார். தமக்கிருந்த எல்லாவற்றையுமே இறைவனின் மகிமைக்காக இழந்தார். 
செபம்:
நலமளிப்பவரே இறைவா! எம் சமுதாயத்தில் நோயால் பாதிக்கப்பட்டு, உடல் வேதனைகளை அனுபவிக்கிற ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உடல் நோய்களை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும், மனபலத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI) - சபை நிறுவுனர்
இவர் ஓர் பிரபு குலத்தில் பிறந்தவர். தனது இளம்வயதிலேயே அசிசியாரின் மறையுரையாலும், அவரின் ஏழ்மையான வாழ்வாலும் ஈர்க்கப்பட்டார். இதனால் அசிசியாரின் மறைபோதனைகளை தவறாமல் கேட்டு வந்தார். மிகவும
் அழகான இளம்பெண் கிளாராவை திருமனம் செய்துகொடுக்க, இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். இதையறிந்த கிளாரா திருமண வாழ்வை விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். பிரான்ஸ் அசிசியார் இருக்கும் இடத்தை தேடி ஓடினார். அசிசியாரை சந்தித்ததும் அவரின் அறிவுரைப்படி புனித ஆசீர்வாதப்பர் சபையில் தங்கினார். அப்போது தன்னுடைய அரண்மனை ஆடைகளை களைந்து துறவற ஆடையை உடுத்திக்கொண்டார். தான் ஓர் துறவி என்பதை மனதில் கொண்டு தன் முடியையும் வெட்டிக்கொண்டார். 

கிளாரா அசிசியாரை போலவே மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஏழைமக்களுக்காக கடுமையாக உழைத்தார். பின்னர் பெண்களுக்கென்று ஓர் துறவற சபையை தொடங்கினார். அசிசியாரின் சபை ஒழுங்குகளையே தானும் கடைபிடித்து தன் சபையினரையும் வாழ வைத்தார். மிகவும் கடுமையான செப, தவ வாழ்க்கையை வாழ்ந்தார். இவரின் சபை ஐரோப்பிய நாடுகளில் பரப்பப்பட்டு, நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது. அன்றிருந்த கடுமையான ஒழுங்குகள், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அசிசியாரின் சபை சகோதரர்களும், திருச்சபையிலிருந்து பல திருத்தந்தையர்களும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்களும் இவரை ஆன்மீக வழிகாட்டியாக தெரிந்துகொண்டு, இவரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்தனர். 

இவர் தனது 59 ஆம் வயதில் தனது துறவற இல்லத்தில் இறைவார்த்தைகளை கேட்டபடியே உயிர்திறந்தார். இவர் இறந்த இரண்டே ஆண்டுகளில் புனிதர் பட்டம் பெற்றார். 
செபம்:
ஏழைகளின் தோழனே எம் இறைவா! ஏழ்மையை ஆடையாகக் கொண்டு வாழ்ந்த புனித கிளாராவைபோல, நாங்களும் ஏழ்மையை நேசித்து, ஏழைகளுக்கு உதவி செய்து , தொடர்ந்து உமது நண்பர்களாக வாழ எமக்கு நீர் உதவி செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை வேண்டுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

 'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை'
1845ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் பிறந்த Juana Cipitria Barriola அவர்கள், வறுமையில் வாடிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற, சிறுவயதிலேயே பிற இல்லங்களில் பணி செய்தார். Salamanca என்ற நகரில் வேலை தேடிச் ச
ென்ற இவர், அந்நகரில் நிலவிய வறுமையை ஒழிக்க உறுதி பூண்டார்.
"நான் கடவுளுக்கு மட்டுமே உரியவள்." என்று அடிக்கடி கூறி வந்த Juana அவர்கள், 23ம் வயதில் இறை அழைப்பை ஏற்றார். 1871ம் ஆண்டு, 'இயேசுவின் புதல்வியர்' என்று அழைக்கப்படும் துறவு சபையை ஆரம்பித்தார். இயேசுவின் கேன்டிடா மரியா (Candida Maria de Jesus) என்ற பெயருடன் தன் அருள் பணிகளைச் செய்தார்.
Juana அவர்கள் ஆரம்பித்தத் துறவுச் சபை, புனித இலயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இத்துறவு சபை, 1902ம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் அங்கீகாரம் பெற்றது. வறுமைப்பட்ட பெண் குழந்தைகளின் கல்வியில் இத்துறவுச் சபை அதிகம் ஈடுபட்டது. 
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் பணிபுரிந்த Juana அவர்கள், 1912ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவரது 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1996ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். 2010ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் கேன்டிடா மரியா அவர்களைப் புனிதரென அறிவித்தார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

திருச்சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா(Edith Stein) - Holy Cross of St. Theresa Benadikta – மறைசாட்சி
இவர் ஓர் யூதர் குலத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டார். பல புனிதர்களின் வரலாற்றை ஆர்வமுடன் வாசித்து, அவர்களைப்போல வாழவே
ண்டுமென்று விரும்பினார். இவர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். இதனால் தாய் மிகவும் கடினப்பட்டு தன்பிள்ளைகளை வளர்த்தார். தெரசா மிகவும் அறிவாளியாக திகழந்தார். பல அறிவியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தார். அப்போது தன் தாய்க்கு உதவி செய்யும் நோக்குடன் ஒரு கிறித்துவ குடும்பத்தில் உதவி செய்ய சேர்ந்தார். அக்குடும்பத்தில் இருந்த ஒரு பெண், தன் தாயை போலவே விதவையாக இருந்தார். தன் கணவரை நினைத்து, திருச்சிலுவையை நோக்கி கண்ணீர்விட்டு மன்றாடி செபித்தார். தொடர்ந்து செபித்த அப்பெண்ணினால் கிறிஸ்துவ மதத்திற்கு தானும் மாற வேண்டுமென்று தூண்டப்பட்டார். 

அப்போது அவ்வூரிலிருந்த பங்கு தந்தையை அணுகி, தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன்பின் முறைப்படி செபங்களை கற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்று கிறித்தவராக மாறினார். பங்குத்தந்தையின் அறிவுரையின்படியும், விருப்பப்படியும் ஓர் கிறிஸ்துவ பள்ளியில் பயின்று, ஆலயக் காரியங்களில் ஈடுபட்டார். நன்கு கற்றுத் தேர்ந்த தெரசா யூதக் குலத்திலிருந்து, கிறிஸ்துவத்திற்கு மாறியபின், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராக பணியாற்றினார். மிகச் சிறப்பாக பணிபுரிந்த அவர் ஹிட்லர் ஆட்சியால் பாதிக்கப்பட்டார். ஹிட்லரால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். 

அவ்வேளையில்தான் ஒருநாள் கார்மேல் மடத்திற்குள் தஞ்சம் புகுவதற்காக நுழைந்தார். நாளடைவில் அக்கன்னியர்களுள் தானும் ஒருவரானார். பலமுறை ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டபோதும், தான் " ஓர் கிறித்தவள்" என்றே கூறினார். இதனால் ஹிட்லர் யூத குலத்திற்கு, மேலும் பல துன்பங்களைக் கொடுத்தான். அப்படி இருந்தபோதும் கூட இறைவனை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்து செபித்தார். ஹிட்லரின் பிடியிலிருந்தபோதும்கூட உடனிருந்த மக்களிடையே போதித்தார். இதனால் ஹிட்லரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் துறந்தார்.
செபம்:
எல்லாம் வல்லவரே எம் தந்தையே! இதோ ஹிட்லர் ஆட்சியின்போது இறந்துபோன, எம் யூத குல சகோதர, சகோதரிகளை உம் பதம் வைக்கின்றோம். அவர்கள் அனைவரையும், நீர் கருணைகூர்ந்து உம் வான்வீட்டில் சேர்த்தருளும். இன்றும் யூத மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை நீர்தாமே அகற்றி, நல்வாழ்வளித்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித கயட்டான் (Kajetan von Tiene) - சபை நிறுவுனர்
இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டார். இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் திருச்சபை சட்டம் பயின்றார். பின்னர் குருத்துவ பயிற்சி பெற்று குருவானார். இவர் இஞ்ஞாசியாருடன் இணைந்து, திருச்சபைய
ில் நடந்த கொடுமைகளை எதிர்த்து, திருச்சபையை நல்வழியில் நடத்தி செல்ல பெரும்பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் பிறரை எல்லாச் சூழலிலும் அன்பு செய்து வாழ்ந்தார். கடுமையான ஒறுத்தல் வாழ்வை வாழ்ந்து பல மாற்றங்களை மக்களிடையே கொண்டுவந்தார். ஏழைகளின் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்ந்தார். 

தான் ஓர் அரச குடும்பத்தில் பிறந்ததால், தன் பெற்றோரின் சொத்திலிருந்து பெற்ற பணத்தைக்கொண்டு, தான் பிறந்த ஊரான விச்சென்சாவில் ஒரு மருத்துவமனையை கட்டினார். தான் வாழ்வு முழுவதையுமே நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார். தன் பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கைவிடப்பட்ட நோயாளிகளை, இறுதிமூச்சுவரை பராமரிக்க ஓர் துறவற சபையை தொடங்கினார். இவரால் தொடங்கப்பட்ட இச்சபையினர் "தியேற்றைன்ஸ்" (Thietrains) என்றழைக்கப்பட்டார்கள். வெனிஸ் நகரிலும், நேப்பிள்ஸ் நகரிலும் இச்சபையை பரவ செய்தார். இத்துறவற சபையினர் பிறருக்கு பணிசெய்வதின் வழியாக, இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவரின் சாட்சிகளாயினர். 

புனித கயத்தான் இறைவேண்டலிலும் பிறருக்கு அன்புப்பணி ஆற்றுவதிலும் சிறந்தவராய் இருந்தார். இறக்கும்வரை இயேசுவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து இறந்தார். 
செபம்:
அன்பு தெய்வமே எம் இறைவா! திருச்சபைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து உயிர் துறந்த புனித கயத்தானைப் போல, எங்கள் வாழ்வில் நாங்களும் உம்மை பற்றிக்கொண்டு, உமது விண்ணரசுக்கு சொந்தமான ஏழை மக்களின் மேல் அன்பு கொண்டு வாழ, நீர் உமது அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney – மறைப்பணியாளர்
மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிட
ம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 

இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார். 
செபம்:
அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli) - ஆயர், மறைசாட்சி
இவர் சில இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்த பின்னர் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் உரோம் நகரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 345 ஆம் ஆண்டு வெர்செல்லி என்ற மறைமாவட்டத்திற்கு முதல் ஆயராக தேர்ந்த
ெடுக்கப்பட்டார். தன்னுடைய எளிமையான மறையுரையின் வழியாக திருச்சபையை அம்மண்ணில் பரவச் செய்தார். தம் மறைமாவட்டத்தில் ஆதின வாழ்க்கையை உருவாக்கினார். திருச்சபைக்காக மன்னர் கொன்ஸ்தான்சியுஸால்(Konsthansiysal) நாடுகடத்தப்பட்டார். அப்போது அவர் பல துன்பங்களை அனுபவித்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் நாட்டிற்கு திரும்பினார். ஆரியுசின் ஆதரவாளர்களுக்கு எதிராக நம்பிக்கையை திரும்பவும் நிலைநாட்டும்படியாக உழைத்தார். 

இவர் ஆரிய பதிதர்களின் அநீதிகளை சுட்டிக்காட்டினார். இதனால் மீண்டும் பாலஸ்தீன நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு தான் அனுபவித்த துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டார். மக்களும் மன்னனும் மனந்திரும்ப தன் துன்பங்களை பொறுமையோடு ஏற்று, வாழ்வை தியாகம் செய்தார். 
செபம்:
அன்பான ஆண்டவரே! உம்மை பறைசாற்றுவதில் ஆயராம் புனித யுசேபியு காட்டிய மன உறுதியை நாங்கள் கண்டுபாவிக்க செய்தருளும். அவர் போதித்த நம்பிக்கையை கடைபிடித்து, உம்மில் பங்கு கொண்டு வாழ எங்களுக்கு அருள்வீராக
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori) - ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church) - பாதுகாவல்: ஒப்புரவு தரும் அருள்தந்தையர் (Confessor), நல்லொழுக்க நீதி சார் இறையியலர்(Moral theologians)
இவர் உரோமன் சட்டத்திலும், திருச்சபை சட்டத
்திலும் பட்டம் பெற்றார். மறைபரப்பு பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் குருத்துவ வாழ்விற்கு தன்னை ஈடுபடுத்தினார். இவரின் வாழ்வு மக்களிடையே பல தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக சிறப்பான இவரின் மறைபரப்புப் பணியால், நேப்பிள்ஸ் நகர் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் "புனித இரட்சகர்" என்ற பெயரில் ஒரு துறவற சபையை நிறுவினார். மக்களிடையே கிறிஸ்துவ வாழ்வை வளப்படுத்த, சிறப்பான மறையுரையை ஆற்றினார். ஒழுக்க நெறி சார்ந்த இறையியல் நூல்கள் பல எழுதினார். இவர் தலைசிறந்த இறையியல் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் ஆயர் பொறுப்பிலிருந்து விலகினார். தான் தொடங்கிய துறவற சபையில் வாழ்ந்தார். மரியன்னையின்மீது பக்தி, திவ்ய நற்கருணை சந்திப்பு, சிலுவைப்பாதை செய்தல் இவைகளில் தன் சபையிலுள்ளவர்களை ஈடுபடுத்தினார். எவற்றின் மீதும் பற்றுக்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தினார். 

இவர் பல பயணங்களை மேற்கொண்டு, நேப்பிள்ஸ் நாட்டில் சிறப்பான மறையுரையை ஆற்றி நன்மைகள் பல செய்தார், இவர் வயது முதிர்ந்தவராய் இருந்ததால் பார்வையிழந்து காணப்பட்டார். இதனால் சிலர் இவரை தவறான வழியில் நடத்தினர். எதிரிகளின் சூழ்ச்சியால், சில முக்கிய ஒப்பந்தங்களில் தெரியாமல், தவறாக கையொப்பமிட்டார். இதனால் இவரின் சபையில் பல பிளவுகள் உண்டானது. இதனால் அல்போன்ஸ் மனமுடைந்து, மிக வேதனை அடைந்தார். சில உறவுகளையும் இழந்தார். நோயினால் தாக்கப்பட்டு கொடுமையான வேதனையை அனுபவித்த அல்போன்ஸ் தனது 83 ஆம் வயதுவரை தன் சபையை சேர்ந்தவர்களாலேயே, ஒதுக்கி வைக்கப்பட்டார். இயேசுவின் பாடுகளை இடைவிடாமல் தனது இறுதி நாட்களில் அனுபவித்து இறைவனடி சேர்ந்தார். 
செபம்:
புனிதத்தின் ஊற்றே எம் இறைவா! உம்மீது தணியாத தாகம் கொண்டார். புனித அல்போன்ஸ் மரிய லிகோரி. புனித வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார். மறைபணியின் வழியாக மக்களின் வாழ்வு நெறியை மாற்றினார். இவரின் போதனைகளை நாங்கள் கடைபிடித்து வாழ, எமக்கு உமதருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித லயோலா இஞ்ஞாசியார் (St.Ignatius Loyola) - சேசு சபை மறைபணியாளர்
இவர் ஓர் உயர் குலத்தில் பிறந்தவர். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். இவர் பல ஆண்டுகள் படைவீரராக பணியாற்றினார். ஒருமுறை போரிடும்போது, அவரின் காலில் பலமாக அடிபட்டது. இதனால் தொடர்ந்து பலநாட்கள்
 மருத்துவமனையில் தங்கி, சிகிச்சைப் பெற்று வந்தார். அப்போது ஒருநாள் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகம் ஒன்று இவருக்கு கிடைத்தது. அப்புத்தகத்தை மிக ஆர்வமாக படித்தார். இயேசுவின் வாழ்க்கை இவரை கவர்ந்திடவே, அவரைப்போல தானும் வாழ வேண்டுமென்று முடிவெடுத்தார். செபவாழ்வில் ஈடுபட்டார். அன்னை மரியின்மேல் ஆழ்ந்த பக்திகொண்டார். எச்சூழ்நிலையிலும் அன்னையைப் பற்றிக்கொண்டு வாழ்ந்தார். ஓர் நாள் அன்னையின் தரிசனத்தையும் காட்சியாக பெற்றார். அதன்பின் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று, பாவமன்னிப்புப்பெற்றார். கடுந்தவம் புரிந்தார். இடைவிடாமல் பல மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்தார். 

பின்னர் பாரீஸ் நகர் சென்று இறையியல் படித்தார். தன்னுடன் பயின்ற சில நண்பர்களையும் தன்னுடன் சேர்த்தார். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, உரோம் நகரில் ஒரு சபையைத் தோற்றுவித்தனர். இச்சபையே "இயேசு சபை" என்று பெயர் பெற்றது. 1534 ஆம் ஆண்டு கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் வார்த்தைப்பாடுகளைப்பெற்று குருவானார்கள். இவர்கள் சிறந்தமுறையில் பணி செய்தார்கள். 1552 ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபையின் முதல் தலைவராக தேர்ந்துக் கொள்ளப்பட்டார். இஞ்ஞாசியார் பல புத்தகங்களை எழுதி அதன் வழியாகவும் மறைப்பணியை ஆற்றினார். இவரும், இவரின் சபைக் குருக்களும் திருச்சபையின் சீரமைப்பில் சிறப்பான பங்கெடுத்தனர். இன்று இவரால் உருவாக்கப்பட்ட இயேசு சபை உலகெங்கும் பரவியுள்ளது. 
செபம்:
என்றும் வாழ்பவரே எம் தந்தையே! புனித இஞ்ஞாசியாரின் வழியாக நீர் இயேசு சபையை உருவாக்கினீர். இதோ உம் பாதத்தில் அச்சபை சகோதரர்கள் அனைவரையும் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus) - ஆயர், மறைவல்லுநர்(Bishop & Doctor of the Church)
இவர் 430 ஆம் ஆண்டு இராவென்னா என்ற நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நகரில் புகழ்மிக்க பணக்காரர்கள் வசித்து வந்தனர். இதனால் உரோமை பேரரசரால் அந்நகர் 
சுற்றி வளைக்கப்பட்ட கைப்பற்றப்பட்டது. அரசர் ஹோனோரியுஸ்(Honorius) என்பவரால் இராவென்னா மக்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள். 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 50ஆண்டுகள் கொன்ஸ்டானிநோபிளில் வாழ்ந்த அரசன் ஒருவன், திருச்சபையைப்பற்றி தவறாக போதித்தான். இதனால் ஆயர் பீட்டர் இதனை சுட்டிக்காட்டி, தவற்றை திருத்திக்கொள்ளவேண்டுமென்று எச்சரித்தார். 

ஆயர் தன் மறைமாநிலம் முழுவதும் மிக எளிமையான முறையில் திருப்பலி நிறைவேற்றி, பொருள் தரும் வகையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனங்களில் இடம்பிடித்தார். பின்னர் மிலான் மறைமாநிலத்திற்கு சென்று அங்கிருந்த சில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். மீண்டும் இராவென்னா வந்த பிறகு, உரோமை அரசரின் கீழிருந்த தன்னுடைய மறைமாநிலத்தை, திருத்தந்தையின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அந்தியோக்கியா நகரிலிருந்த இறையியல் பள்ளிக்கு தேவையான சில புத்தகங்களை எழுதினார். இவரின் நூல்கள் அனைத்திலும் மரியன்னைக்கென்று சிறப்பிடத்தை தந்துள்ளார். இதன் வழியாக இவர் அன்னையின் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பதை அறியலாம். 

இவர் ஆயராக பணிசெய்த ஆண்டுகளில் கிறிஸ்துவத்தை பணக்கார மக்களிடையே பரப்பி, அவர்களை இறைவன்பால் ஈர்த்தார். பலரால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் மிக எளிதாக தீர்த்துவைத்தார். பல நாடுகளிடையே சமாதானத்தை கொண்டுவந்தார். ஒற்றுமையின்றி இருந்த அரசர்களை சேர்த்து வைத்து, கிறிஸ்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். தான் எழுதிய பல இறையியல் நூல்களின் வழியாக பல குருக்களின் வாழ்வை மாற்றி, இறையழைத்தலை பெருகச் செய்தார். இவர் தன் மறைமாநிலம் முழுவதும் பல ஆலயங்களை எழுப்பினார். பல கல்விக்கூடங்களையும், இறையியல் கல்லூரிகளையும் நிறுவினார். தான் சென்ற இடமெல்லாம் மக்களை ஒன்றுகூட்டி போதித்தார். ஒவ்வொரு போதனைகளிலும் " மனிதனுக்கு பட்டம், பதவி, பணம் இவற்றைவிட செபம் என்பது மிகவும் அவசியமானது. செபிக்காதவன் இறந்தவன்; நம் செபம் இவ்வுலகில் மணம் வீச வேண்டும்" என்று தவறாமல் கூறுவார். அவ்வாறு ஒருநாள் போதித்து முடித்தபிறகு, மிக அமைதியாக அமர்ந்தபோது, எவ்வித சலசலப்புமின்றி ஆழ்ந்த அமைதியில் இறைவனடி சேர்ந்தார். 
செபம்:
என்றும் வாழும் தந்தையே! செபமே வாழ்க்கை என்று வாழ்ந்து, செபத்தின் வழியாக தான் பெற்ற அருள்கொடைகளை உம் மக்களுக்காக பயன்படுத்திய புனித பீட்டரைப்போல, எம்மையும் நீர் பயன்படுத்தும். நாங்கள் செபிக்கின்ற செபத்தின் வல்லமை, இவ்வுலக மக்களுக்கு பயன்தர எங்களை தயார் படுத்தும். மிகுந்த நாவன்மை பெற்று உம்மை இவ்வுலகில் பறைசாற்ற எமக்கு உமது வல்லமையை தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித மார்த்தா (St.Martha)
இவர் மரியா, லாசர் இவர்களின் உடன்பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல்
போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார். 
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம் திருமகன் இயேசு, புனித மார்த்தாவின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கத் திருவுளமானார். அவருடைய வேண்டுதலால் நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளில் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு உண்மையுடன் பணிபுரியவும், உமது விண்ணக வீட்டில் எங்களை கொண்டுவந்து சேர்க்கவும் அருள்புரிவீராக. இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித.கிறிஸ்டோபர் (St.Christopher)
மறைசாட்சி, வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாவலர் இவருக்கு ரெப்ரோபூஸ் (Reprobus) என்ற பெயரும் உண்டு. பல மக்களை மனமாற்றியதால், இவரை டேசியூஸ் அரசன் (Decius) கொல்ல ஆணையிட்டான். இவர் வழித்துணை பாதுகாவலராக போற்றப்படுகின்றார். அதற
்கு ஒரு வரலாறு உண்டு. 

ஒருநாள் இவர் ஆற்றைக் கடக்கும்போது, ஒரு சிறு பிள்ளை வந்து என்னையும் தூக்கி, கரையை கடக்க உதவுங்கள் என்றது. இவரும் அக்குழந்தையே தோளில் சுமந்துகொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் குழந்தை கனக்க ஆரம்பித்தது. அவரால் வலியை பொறுக்கமுடியவில்லை. இருந்தும் கீழே விட்டுவிடாமல் கரையை கடந்தார். இறக்கியவுடன் அக்குழந்தை "நான் தான் கிறிஸ்து" என்று சொல்லி மறைந்தது. 

நீண்ட பயணம் செய்பவர், இவரிடம் ஜெபித்த போது பல நன்மைகளை பெற்றுள்ளனர். வயலில் வேலை செய்பவர்களூம் தண்ணீர் வேண்டி ஜெபித்த போது மழையை பெற்றுள்ளனர். ஐரோப்பாவில் இவரின் பக்தி அதிகமாக பரவியுள்ளது. 
செபம்: என்றும் வாழ்பவரே எம் இறைவா! இவ்வுலகில் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றது. புனித கிறிஸ்டோபரின் வழியாக நீரே பாதுகாப்பான பயணத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித யாக்கோபு (St. James) - திருத்தூதர் (Apostle)
இவர் செபதேயுவின் மகன். திருத்தூதரான யோவானின் சகோதரர். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து ஆற்றிய முக்கிய புதுமைகளின்போது உடனிருந்தவர். இவர் ஏரோது அரசனால் கொல்லப்பட்டார். இவர் பயன்படுத்திய சில பொருட்களும், திருப்
பண்டமும் ஸ்பெயின் நாட்டிலுள்ள கம்போஸ்தெல்லா என்ற இடத்தில் வைக்கப்பட்டது. ஸ்பெயின் நாடு முழுவதும் இவரின் பக்தியால் பரப்பப்பட்டது. அந்நாட்டில் இப்புனிதரின் பெயரில் பெரிய பேராலயம் கட்டப்பட்டுள்ளது. யாக்கோபின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர் இவரின் பெயரில் திருவிவிலியத்தில் "யாக்கோபு" என்னும் திருமுகம் ஒன்றை எழுதியுள்ளார். இயேசுவின் இடப்புறத்திலும், வலப்புறத்திலும் இருக்க வேண்டுமென்று ஆசை கொண்டவர் இவர். இதனால் மற்ற சீடர்களின் கோபத்திற்கும் ஆளாக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்டவர் மேல் அளவில்லா அன்பு கொண்டதால்தான், இயேசு தன்னை அழைத்தவுடனே அவரை பின் தொடர்ந்துச் சென்றார். இயேசுவின் திருத்தூதர்களில் மிக இளம்வயதில் முதலாவதாக இறந்தவர் புனித யாக்கோபு. 
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! உம்மை முன்னிட்டு தன் வாழ்வை அர்ப்பணித்தார் புனித யாக்கோபு. இவரின் மறைசாட்சி இறப்பால், மற்ற திருத்தூதர்களை திடப்படுத்தினீர். உம் பணி இவ்வுலகில் நிறைவேற முதன்முதலாக தன் வாழ்வை இழந்த புனித யாக்கோபை போல, உமக்கும், உம் வார்த்தைகளும் நாங்கள் என்றும், சான்று பகர்ந்து வாழ உம் வரம் தாரும் தந்தையே.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

No comments: