10/28/2018

புனித பிரான்சிஸ் போர்ஜியா St. Francis Borgia, Confessor & Priest 
பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் (Eleanor) என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்
சியான வாழ்வை வாழ்ந்தனர். இவர் தனது குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார். இவர் அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார். ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார். 

இவர் குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். இவரின் இயேசு சபை தலைவர். பிரான்சிசை சோதிக்கும் நோக்குடனும் அவரின் ஆன்மீக வாழ்வை அறியவும், சபை தலைவர் இவ்வாறு சிறப்பித்தார். ஆனால் பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார். 

இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை இக்குருக்கள் திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றியனைத்தும் அருள்தந்தை பிரான்சிசைச் சார்ந்தது. 
செபம்:
விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் ஒருபோதும், பெற்றுக் கொள்ளாதவரே தெய்வமே! இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் துறந்து, தாழ்ச்சியோடும், எளிமையோடும் வாழ்ந்த புனித பிரான்சிஸ் போர்ஜியாவின், முன்மாதிரியான வாழ்வை, நாங்களும் பின்பற்றி ஏழ்மையை ஆடையாக உடுத்தி வாழ, வரம் தர இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித வனத்து அந்தோணியார் (251–356)

எகிப்தில் செல்வச் செழிப்புமிக்க நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர் அந்தோணி. இவருக்கு 18 வயது நடந்தபோது திடீரென இவரது பெற்றோர் இறந்தனர். திருமணமாகாத சகோதரி இவரது பொறுப்பில் விடப்பட்டார். பெற்றோரது இழப்பின் துயரத்தில்
 இருந்தபோது, ஒருநாள், 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்' என்ற இயேசுவின் அருள்வாக்கை வாசிக்கக் கேட்டார். இந்த அருள்வாக்கை அப்படியே ஏற்ற அந்தோணி, தனது குடும்பச் சொத்தின் ஒரு பகுதியை அண்டை வீட்டாருக்குக் கொடுத்தார். எஞ்சியுள்ள சொத்தை விற்று அப்பணத்தை ஏழைகளுக்கான நிதி சேமிப்புக்குக் கொடுத்தார். தனது சகோதரியை ஒரு கிறிஸ்தவ கன்னியர் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, அலெக்சாந்திரியாவின் மேற்கிலுள்ள பாலைநிலத்துக்குச் சென்றார். அங்கு தனியாகச் செபத்திலும் தபத்திலும் செலவழித்தார். மனச்சோர்வு, சோம்பல், அழகான பெண்கள் போன்ற வடிவங்களில் சாத்தான் இவரைக் கடுமையாய்ச் சோதித்தது. இவர் நினைவிழக்கும் நிலைக்கு, சில நேரங்களில் சாத்தான் இவரைக் கொடூரமாய் அடித்துப்போட்டது. அவர் இப்படி படுத்துக் கிடந்ததை மக்கள் பார்த்துள்ளனர். ஒரு சமயம், ஓநாய்கள்,குள்ளநரிகள், சிங்கங்கள், பாம்புகள், தேள்கள் போன்ற கொடிய காட்டு விலங்குகள் அவரைத் தாக்குவதற்குத் தயாராக அவர்முன் நின்றன. அப்போது அவர் சப்தமாகச் சிரித்துக்கொண்டே, என்னைத் தாக்குவதற்கு உங்களில் ஒருவரே போதும் என்று சொன்னவுடன், புகைபோன்று அவை மறைந்து போயின. ஒருமுறை இவர் நடந்துபோகும்போது வழியில் தட்டு நிறைய வெள்ளிக் காசுகள் கிடந்தன. பின்னர் ஒருநாள் தங்கக் காசுகளைக் கண்டார். பாலைநிலத்தில் சாத்தான் இப்படி அந்தோணியாரைப் பல வழிகளில் சோதித்தது. அனைத்துச் சோதனைகளையும் ஆழ்ந்த செபத்தால் வெற்றி கண்ட இவர், புனித வனத்து அந்தோணியார், புனித பெரிய அந்தோணியார் என அழைக்கப்படுகிறார். அனைத்துத் துறவிகளுக்கும் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவரின் விழா சனவரி 17.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
லீமா நகர் புனித ரோசா Rosa von Lima OSD – திருக்காட்சியாளர்
இவர் வீட்டிலிருந்த குறைந்த காலத்திலேயே, புண்ணிய வாழ்வை பேணி வளர்க்கத் தொடங்கினார். இவர் மிகவும் அழகானவர். மிகவும் வறுமையில் வளர்ந்தவர். குடும்பச்சுமையை போக்க சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைத்
தார். இவர் அழகாக இருந்ததினால், ஏராளமானோர் இவரை விரும்பத்தொடங்கினர். இதனால் தன் உடலை தானே அழித்துக்கொள்ள விரும்பினார். 

இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் இவரோ இயேசுவை பின்பற்றி அவருக்காக வாழ விரும்பினார். புனித தோமினிக்கின் 3 ஆம் சபையில் சேர்ந்து, துறவற உடையை அணிந்து கொண்டார். தவ வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி, செபவாழ்வில் ஆழ்ந்து இருந்தார். இறைவனோடு ஒன்றிணைந்து தியானிப்பதில் உயர்ந்த நிலையை அடைந்தார்.
செபம்:
அன்பான இறைவா! இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு விவசாய மக்களையும் நீர் ஆசீர்வதியும். தேவையான மழையை தந்து, விவசாயத்தை செழிப்படைய செய்யும், தேவையான வசதிகளை தந்து, இயற்கையின் வழியாக உம்மை நேசிக்க வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
அவிலாவின் புனித தெரேசா ( St. Theresa of Avila )
கன்னியர், மறைவல்லுநர் :(Virgin, Doctor of the Church)
பிறப்பு : மார்ச் 28, 1515 கோடரெண்டுரா, அவிலா, (இன்றைய ஸ்பெயின்) (Gotarrendura, Ávila, Crown of Castile (Today Spain)
இறப்பு : 4 அக்டோபர் 1582 (அகவை 67) அல்பா தே தொர்மஸ், எசுப்பானியா (Alba de Tormes, Salamanca, Spain)
அருளாளர் பட்டம் : ஏப்ரல் 24, 1614 திருத்தந்தை ஐந்தாம் பவுல்; ரோம்
புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622 திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி; ரோம்
அவிலாவின் புனித தெரேசா, அல்லது இயேசுவின் புனித தெரெசா, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். ஸ்பெயின் நாட்டினரான இவர், கார்மேல் சபைத்துறவி ஆவார். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். சிலுவையின் புனித யோவானோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்கினார். இவரின் ஆழ்நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமையும் இவரையே சாரும்.
தெரசா, 'அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா' ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் 'பெயாட்ரிஸ் டீ அஹுமதா' (Beatrix de Ahumada) ஆகியோரின் மகளாக பிறந்தார்.
சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும் பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள். இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுத்தான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும் கூறினார்.
இவர் தனது 7ம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527ல் அவரின் 12ம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535ம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.
அப்போது தெரசா நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில் 1539ம் ஆண்டு, இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். இவைகளை உடனிருந்த அருட்சகோதரிகள் நம்பிக்கை கொள்ளாமல், அவருக்கு எதிராக செயல்பட்டனர்.
அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கினர்.
1560ல் தனது 45ம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப்போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் 1562ல் தெரசா அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு தன் வாழ்வை வாழ்ந்தார். செபம் ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டார். இவரின் செப வாழ்வால் 1568ல் மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். பின்னர் 1577ம் ஆண்டில் 17 பெண்கள் துறவற இல்லமும், 15 ஆண்டுகளுக்கான துறவற இல்லமும் காணப்பட்டது. இவ்வில்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.
தெரசா பல முறை திருக்காட்சியைக் கண்டார். இவைகளை 400க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதினார். இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் திருக்காட்சியின் மறைவல்லுநர் என்றழைக்கப்பட்டார். தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி செய்த தெரசா தனது 65ம் வயதில் உடல்நிலை குன்றி இறைவனடி சேர்ந்தார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மறைப்பணியாளர் ஆயர் பேட்ரிக் Patrick
இவரின் தந்தை தியாக்கோனாக இருந்தவர். பேட்ரிக் குழந்தையாக இருக்கும்போதே நாடு கடத்தப்பட்டார். ஏறக்குறைய 6 வருடங்கள் அகதியாக வாழ்ந்தார். அப்போது இவரின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இவர் தன் மனதிற்கு
ள் ஏற்பட்ட தூண்டுதலின் பேரில் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அதன்பிறகு மீண்டும் தன் மனதிற்குள் ஒரு ஒலி பேசுவதை உணர்ந்தார். அவ்வொலி பேட்ரிக்கை அயர்லாந்து நாட்டிற்கு மறைபரப்பு பணியை செய்யும்படி வலியுறுத்தியது. 

அதன்பேரில் பேட்ரிக் ஃபெஸ்லாண்ட் Festland சென்று சில வருடங்கள் அங்கேயே வாழ்ந்து வந்தார். அங்கிருந்து 432 ஆம் ஆண்டு மீண்டும் அங்கிருந்து அயர்லாந்து சென்றார். அங்கு மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியாற்றினார். இவரை திருத்தந்தை முதலாம் கொலஸ்டின் Cölestin I அயர்லாந்தின் முதல் ஆயராகத் தேர்ந்தெடுத்தார். இவர் மிகச் சிறப்பாக இறைப்பணியை ஆற்றினார். இவர் அயர்லாந்து நாடு முழுவதும் சென்று மறைப்பரப்பு பணியாற்றினார். இவர் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியைப் போதித்தார். பலரைத் திருமுறைக்கு மனந்திருப்பினார். அயர்லாந்து திருச்சபையை ஒழுங்குப்படுத்தினார். 
செபம்:
மாட்சி மிகுந்த எல்லாம் வல்ல கடவுளே! அயர்லாந்து நாடு மக்களூக்கு உமது மாட்சியை போதிக்க ஆயராம் புனித பேட்ரிக்கை அனுப்பியதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். கிறித்துவர் என அழைக்கப்படுவதில் பெருமை கொள்ளும் நாங்கள் மீட்பின் நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றத் தொடர்ந்து உழைக்க உமதருள் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்பட்ட நாள் (The Beheading of St. John the Baptist) 
யோவான் நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தார். இதை அறிந்த ஏரோது அரசன் அவரை சிறையலடைத்தான் (எசாயா 49:1-2) ல் கூறுவதுபோல மறைசாட்சியாக மரித்தார். தாம் அளித்த வாக்க
ுறுதியின்படி கடவுள் அவருடைய வழி மரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை" என்று கூறினார் (திருத்தூதர்பணி 13:23-25) ஏரோது அரசன் குடித்து, ஏரோதியாளின் நடனத்துக்கு அடிமையாகி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே, தன் காவலனை அனுப்பி சிறையிலிருந்த யோவானுடைய தலையை வெட்ட செய்தான். பின்னர் யோவானின் சீடர்கள் வந்து, அவரின் உடலை எடுத்து சென்றனர். ஜெலாசியன் திருத்தந்தைக்கு உரித்தாக்கப்படுகின்ற முற்கால வழிபாட்டு புத்தகத்தில் கண்டுள்ளபடி இன்றைய திருநாளின் பெயர், "புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்" என்றும், "புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது" என்றும் அழைக்கப்படுகின்றது. 
செபம்:
ஆற்றலும், ஆறுதலும் அருளுகின்ற இறைவா! அறிவிக்கும் நற்செய்தி பணியாளராக புனித திருமுழுக்கு யோவானை நீர் ஏற்படுத்தினீர். உண்மைக்கும், நீதிக்கும் அவர் சாட்சியாக தம் உயிரை ஈந்ததுப்போல, நாங்களும் உம் போதனைகளை எடுத்துரைக்க ஊக்கமுடன் பாடுபட உமதருளை தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பியட்ரல்சினா நகரின் புனித பியோ (St. Pio of Pietrelcina)
கப்புச்சின் துறவற சபையின் குரு, துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு :
பிறப்பு : மே 25, 1887, பியட்ரல்சினா, பெனேவென்ட்டோ, இத்தாலி
இறப்பு : செப்டம்பர் 23, 1968 (அகவை 81) சான் ஜியோவானி ரொட்டொன்டோ, இத்தாலி
(San Giovanni Rotondo, Foggia, Italy)
அருளாளர் பட்டம் : மே 2, 1999 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் - ரோம், இத்தாலி
புனிதர் பட்டம் : ஜூன் 16, 2002 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் - ரோம், இத்தாலி
பாதுகாவல் - மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள், கத்தோலிக்க பதின்வயதினர்.
பியட்ரல்சினா நகரின் புனித பியோ, கப்புச்சின் துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன், கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்; குருவானது முதல் பாத்ரே பியோ என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002 ஜூன் 16 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
தொடக்க காலம் :
இத்தாலியின் விவசாய நகரான பியட்ரல்சினாவில், க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன் (1860–1946) - மரிய க்யுசெப்பா டி நுன்சியோ (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887 மே 25ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த சிற்றாலயத்தில், தனது சிறுவயதில் இவர் பலிபீடப் பணியாளராக இருந்து திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார். இவருக்கு மைக்கேல் என்ற அண்ணனும், பெலிசிட்டா, பெலக்ரீனா மற்றும் க்ராசியா ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ம், வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவசந்நியாசியாக நுழைந்த இவர், ஜனவரி 22ம் தேதி தனது துறவற ஆடையைப் பெற்றுக் கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார். இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.
குருத்துவ வாழ்வு :
ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின்னர் 1910ம் ஆண்டு பியோ குருவானார். இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றியதால் இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.
1917ம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.
இவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்ää பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.
திருக்காய வரம் :
1918ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறும் பேறு பெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.
அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.
இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின. லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை. ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.
இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன. 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.
புனிதர் பட்டம் :
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்" என்று குறிப்பிடுவார். 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும், இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ம் தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.
1968 செப்டம்பர் 23ம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ம் தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித மதர் தியோடர் குரீன், சபைத் தலைவர் St. Mother Theodore Guerin 
இவர் புனித மேரி ஆஃப் வூட்ஸ் Saint Mary of Woods என்ற சபையை நிறுவினார். இவர் நல்லொழுக்கத்தால், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்தார். இ
வர் தனது செப வாழ்வினால் மிகவும் வலிமைப் பெற்று வாழ்ந்தார். தனது எளிமையான வாழ்வால், இவ்வுலக துன்பங்களை எதிர்த்தார். ஏராளமான துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். அமைதியின் சிகரமாய் இருந்தார். 

இவர் 1825 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் நாள் துறவியானார். 1840-1856 ஆம் ஆண்டு வரை புனித வூட்ஸ் மேரி Sisters of Providence of Saint Mary of the Woods என்ற சபையை நிறுவி, அச்சபையின் தலைவியாக பொறுப்பேற்றார். சபையை நிறுவி, பொறுப்பேற்ற நாளிலிருந்து, தன்னை இறைவனிடம் கையளித்து, இறைவன் மட்டுமே சபையை வழிநடத்த வேண்டுமென்று இடைவிடாமல் செபித்தார். இறைவனின் வழிநடத்துதலாலும், பராமரிப்பினாலும் பல வழிகளில், பலமுறை வெற்றியும் கண்டார். 
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த புனித மதர் தியோடர் குரீன் வழியாக நல்ல ஆயர்களை தந்தீர். புதிய சபை உருவாக்கியதன் வழியாக, மேலும் உம் பணியை வளர்ச்சியடைய செய்தார். இன்றும் இவ்வுலகில் புதிதாக தொடங்குகின்ற துறவற சபைகளை நீர் ஆசீர்வதித்து தொடர்ந்து பராமரித்து வழிநடத்தியருளும்படியாக ஆயனே உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Sep 15 : St.Catherine of Genova
25 ஆண்டுகள் ஒப்புரவு அருளடையாளத்தை முழுமையாய் நிறைவேற்ற இயலாதவர்:
கத்தோலிக்கத் திருஅவையில் ஒருவர் பாவமன்னிப்புப் பெறுவதற்காக, அருள்பணியாளர் நிறைவேற்றும் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற, 25 ஆண்டுகளாகச் சென்றும், தனது மனதை மு
ழுமையாய்த் திறந்து சொல்ல இயலாமல், பாதியிலேயே அதனைக் கைவிட்டவர் புனித கேத்ரீன். இவர் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இதற்கான விளக்கத்தை தனது ஆன்ம குரு மரபோத்தியிடம் விளக்கியிருக்கிறார். ஜெனோவாவில் செல்வக்குடும்பத்தில் பிறந்த கேத்ரீன், 16வது வயதில் ஜூலியானோ அதோர்னோவுக்குப் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அன்பற்ற தனது கணவரின் கடுங்கோபம், நம்பிக்கைத் துரோகம், ஊதாரித்தனம் போன்றவற்றால் பத்து ஆண்டுகள் திருமண வாழ்வில் கடும்துன்பங்களை மௌனமாக ஏற்றுக்கொண்டார் கேத்ரீன். பின்னர் ஆறுதல்தேடி, அருள்சகோதரியான தனது அக்கா சேர்ந்திருந்த துறவு இல்லம் சென்றார். ஆனால் அவரது அக்காவோ, கேத்ரீனை ஆலயம் சென்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெற்று பாவமன்னிப்புப் பெறுமாறு கூறினார். அது 1473ம் ஆண்டு மார்ச் 22. அன்று கேத்ரீன் ஆலயம் சென்று அருள்பணியாளரிடம் பாவங்களை அறிக்கையிடத் தொடங்கினார். அச்சமயம் திடீரென கடவுளின் அன்பை அதிகமாக உணர ஆரம்பித்தார். கடவுளின் ஆற்றல் கேத்ரீனில் இறங்கியது. ஆதலால் ஒப்புரவு அருளடையாளத்தை முழுமையாக நிறைவேற்றாமல் ஆலயத்தைவிட்டு வெளியேறினார். அன்று தொடங்கி அடுத்த ஏறக்குறைய 25 ஆண்டுகள் இந்த அருளயடையாளத்தை நிறைவேற்ற அடிக்கடி ஆலயம் சென்றார் கேத்ரீன். ஆனால் எல்லா நேரங்களிலும் அதனை பாதியிலே விட்டுவிட்டு வந்தார். இச்சமயங்களில் ஏற்பட்ட ஆழ்ந்த இறையனுபவத்தால், ஜெனோவா மருத்துவமனை சென்று நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தன்னலமற்ற சேவையாற்றத் தொடங்கி அச்சேவைக்கே தன்னை முழுமையாய் அர்ப்பணித்தார் கேத்ரீன். பின்னர் அம்மருத்துவமனையின் நிர்வாகியானார். கேத்ரீனின் கணவர் அதோர்னோவும் பின்னர் மனம்மாறி, அதே மருத்துவமனையில் பிறரன்புச் சேவையில் ஈடுபட்டார். செபத்தில் பல ஆழ்ந்த இறையனுபவங்களை பெற்ற ஜெனோவா நகர் புனித கேத்ரீனின் விழா செப்டம்பர் 15. 1447ம் ஆண்டு பிறந்த இவர் 1510ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ஜெனோவாவில் காலமானார். 
கேத்ரீனின் பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் கேத்ரீன்தான் கடைக்குட்டி. இவருக்கு 16 வயது நடந்தபோது இவரது தந்தை காலமானார். அதனால் அதே ஆண்டு கேத்ரீனுக்குத் திருமணம் நடந்தது. கேத்ரீனின் கணவர் ஜூலியானோ அதோர்னோ, மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரம் செய்து பல அனுபவங்களைப் பெற்றவர், செல்வந்தர்.
September 15.—ST. CATHERINE OF GENOA.
NOBLE in birth, rich, and exceedingly beautiful, Catherine had as a child rejected the solicitations of the world, and begged her divine Master for some share in His sufferings. At sixteen years of age she found herself promised in marriage to a young nobleman of dissolute habits, who treated her with such harshness that, after five years, wearied out by his cruelty, she somewhat relaxed the strictness of her life and entered into the worldly society of Genoa.
At length, enlightened by divine grace as to the danger of her state, she resolutely broke with the world and gave herself up to a life of rigorous penance and prayer. The charity with which she devoted herself to the service of the hospitals, undertaking the vilest of offices with joy, induced her husband to amend his evil ways and he died penitent.
Her heroic fortitude was sustained by the constant thought of the Holy Souls, whose sufferings were revealed to her, and whose state she has described in a treatise full of heavenly wisdom. A long and grievous malady during the last years of her life only served to perfect her union with God, till, worn out in body and purified in soul, she breathed her last on September 14, 1510.
Reflection.—The constant thought of purgatory will help us not only to escape its dreadful pains, but also to avoid the least imperfection which hinders our approach to God.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித ஃபவுஸ்டினா (St. Faustina Kowalska)
பிறப்பு : ஆகஸ்ட் 25, 1905, குலோகோவிச், ரஷியப் பேரரசு, (Głogowiec, USSR)
இறப்பு : அக்டோபர் 5, 1938 (அகவை 33), க்ராக்கோவ், போலந்து, Kraków, Poland)
அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
புனிதர் பட்டம் : 30 ஏப்ரல் 2000, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், வத்திக்கான்
மரிய ஃபவுஸ்டினா கோவால்ஸ்கா போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இக்குறிப்புகள் பின்னாளில் (Diary: Divine Mercy in My Soul) என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தனது 20ம் வயதில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மிக்கேல் ஸ்போகோ என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.
இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வண்ணமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது.
1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும், வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும், அது கண்டு பிடிக்கப்பட்டதனால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் நினைவுத் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித புரூனோ St. Bruno 
இவர் தனது கல்வியை பிரான்சிலுள்ள ரைம்ஸ் (Rheims) நகரில் முடித்தார். 1056 ஆம் ஆண்டு ரைம்சில் இறையியல் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அக்கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் 1075 ஆம் ஆண்டில் ரைம்சில
் ஆலய நிர்வாகியாக(Chancellor) நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1088 ல் திருத்தந்தை 2 ஆம் ஊர்பான் (Urban II) அவர்களுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

இவர் மிக தைரியத்துடன் விசுவாசத்தை அறிவித்தார். திருச்சபையில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதினார். இவரின் இளமைப் பருவ வாழ்வைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் புனித பவுலைப் பற்றியும், திருப்பாடல்களைப் பற்றியும் Commentary on St. Paul and Psalms) எழுதிய புத்தகம் புகழ்பெற்றது. 

திருச்சபையில் திருத்தந்தைக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அகற்ற, திருத்தந்தை 7 ஆம் கிரகோரிக்கு பெரிதளவில் உதவினார். இறைவனின் மேல் கொண்ட பற்றால், கர்த்தூசியன் (Carthusian) சபையை தொடங்கினார். இச்சபை தொடங்கிய காலத்தில், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1514 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 10 ஆம் லியோ மீண்டும் அச்சபையை ஊக்கமூட்டி வளர்த்தெடுத்தார். 
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! சிறந்த அறிவாளியான புனித புரூனோவை, எம் திருச்சபைக்கு, கொடையாகத் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அற்புதமான முறைய்ல் பணியை ஆற்றிய புரூனோவைப்போல, நீர் எமக்குத் தந்த அறிவை பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட உம் ஆசீரைத் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ஆண்ட்ரூ கிம் டாகோன் ✠(St. Andrew Kim Taegon) கொரியா நாட்டின் கத்தோலிக்க குரு :
பிறப்பு : ஆகஸ்ட் 21, 1821, சொல்மோ, டான்க்ஜின், கொரியா - (Solmoe, Dangjin, Korea)
இறப்பு : செப்டம்பர் 16, 1846 (அகவை 25), ஹேன் நதி, ஹேன்சியோங், ஜோசியோன், (தற்போது சியோல
், தென் கொரியா) - (Han River, Hanseong, Joseon) (Now Seoul, South Korea)
அருளாளர் பட்டம் : 1925, புனிதர் பட்டம் : 6 மே 1984 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
புனித ஆண்ட்ரூ கிம் டாகோன், கொரிய நாட்டில் பிறந்த முதல் கத்தோலிக்க குருவும், கொரிய நாட்டின் பாதுகாவலரும் ஆவார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கொரியாவில் கத்தோலிக்கம் மெதுவாக வேர் விட ஆரம்பித்திருந்தது.
'யங்க்பன்' (Yangban) என்பவருக்கு பிறந்தவர் புனித ஆண்ட்ரூ கிம். இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள். அக்காலத்தில், கிறிஸ்தவம் சம்பந்தமாக பேசுவதுகூட தடை செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்தவ நடவடிக்கைகள் காரணமாக புனிதரின் தந்தை துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.
பதினைந்து வயதில் ஞானஸ்நானம் பெற்ற கிம், போர்த்துகீசிய காலனியிலுள்ள (Portuguese colony) பாடசாலையில் கல்வி கற்றார். அவர் புனிதராக பட்டமளிக்கப்பட்ட 'லோலோம்போய்', 'பொகாஉ', 'புலாக்கன்', 'பிலிப்பைன்ஸ்' (Lolomboy, Bocaue, Bulacan, Philippines) ஆகிய இடங்களிலும் கல்வி கற்றார்.
சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர், (1844) அவர் 'ஷாங்காய்' (Shanghai) நகரில் ஒரு ஃபிரென்ச் ஆயரால் குருத்துவம் பெற்றார். பின்னர், அவர் மத போதனை செய்வதற்காகவும் நற்செய்தி அறிவிக்கவும் கொரியா திரும்பினார்.
'ஜோசியன்' (Joseon Dynasty) வம்ச காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டது. எண்ணற்ற கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு மற்றும் மரண தண்டனை அளிக்கப்பட்டனர். கத்தோலிக்கர்கள் தமது விசுவாசத்தை இரகசியமாக கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
இந்நேரத்தில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் கிறிஸ்தவர்களில் புனிதர் ஆண்ட்ரூ கிம்மும் ஒருவர். 1846ல், தமது 25ஆம் வயதில் ஆண்ட்ரூ கிம் 'சியோல்' (Seoul) நகரருகேயுள்ள 'ஹான் நதியில்' (Han River) கோரமாக துன்புறுத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
துன்பங்களுக்கு அஞ்சாதவர் (St. Bibiana) 
கிறிஸ்தவர்களை வதைத்துவந்த உரோமைப் பேரரசர் ஜூலியன், கி.பி.363ம் ஆண்டில், Apronianus என்பவரை உரோமை ஆளுனராக நியமித்தார். அச்சமயத்தில் உரோமையில் இரு சகோதரிகள் பெற்றோரின்றி வாழ்ந்தனர். அதோடு இவர்களின் சொத்துக்களையும் 
ஆதிக்கவர்க்கத்தினர் அபகரித்துக்கொண்டார்கள். வறுமையும் பசியும் ஒருபுறம் வாட்டினாலும், கடவுள் நம்பிக்கையை மட்டும் இச்சகோதரிகள் கைவிடவில்லை. பெற்றோர் கொலைசெய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும், கடும் துன்பங்கள் மத்தியில் கிறிஸ்துவ விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்த சகோதரிகள்தான் பிபியான மற்றும் தெமெத்ரியா(Demetria). இவர்களின் மனஉறுதியைப் பார்த்த ஆளுனர் அப்ரோனியானுஸ் முதலில் தெமெத்ரியாவை வரவழைத்து விசாரித்து துன்புறுத்தினார். தெமெத்ரியா கிறிஸ்துவைத் துணிச்சலுடன் அறிக்கையிட்டு, அவ்விடத்திலேயே விழுந்து இறந்தார். பின்னர் பிபியானாவை அதிகமாகச் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். ரூஃபினா(Rufina) என்ற ஒழுக்கங்கெட்ட பெண்ணிடம் பிபியானாவை ஒப்படைத்து மனம் மாற்ற முயற்சித்தார் ஆளுனர். அனைத்திலும் தோல்வி கண்ட அவர், பிபியானாவை ஒரு தூணில் கட்டி, இரும்புக் குண்டுகளைக்கொண்ட சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டார். சதைகள் பிய்ந்து தொங்கி இரத்தம் கொட்டின. பிபியானா அதிலும் உறுதியாய் இருந்ததால், உயிர்போகும்வரை அவரை அடித்தனர். பின்னர் பிபியானாவின் உடலை விலங்குகளுக்கு இரையாகப் போட்டனர். ஆனால் விலங்குகள் பிபியானாவின் உடலை நெருங்கவே இல்லை. இரண்டு நாள்கள் கழித்து கிறிஸ்தவர்கள் பிபியானாவை நல்லடக்கம் செய்தனர். மறைசாட்சி பிபியானாவின் விழா டிசம்பர் 02. புனித பிபியானாவைக் கட்டி அடித்த தூண் உரோம் நகரில் அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. இப்புனிதரின் தந்தை Flavianம், உரோமைப் படையில் உயர்ந்த நிலையில் இருந்தவர். இவர் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததால் இவரது முகத்தை, பழுக்கக் காய்ச்சிய இரும்பால் தேய்த்தனர். முகம் சிதைந்து வலியால் துடித்த அவரை வேறு பகுதிக்கு விரட்டி அடித்தனர். சீழ்வைத்த முகத்தோடு அந்த வலியில் அவர் இறந்தார். பிபியானாவின் தாய், Dafrosaவையும் தலைவெட்டிக் கொன்றனர். பிபியானாவின் பெற்றோர், பிபியானாவும், தெமெத்ரியாவும் இறக்குமுன்பே கொல்லப்பட்டுவிட்டனர். எனவே பிபியானாவின் குடும்பத்தில் எல்லாருமே மறைசாட்சிகள்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனிதரும் மனிதரே - பேரரசரின் அன்னையால் உயர்த்தப்பட்டத் திருச்சிலுவை 
திருச்சிலுவையை மையப்படுத்தி, செப்டம்பர் 14, கொண்டாடப்படும் இத்திருநாள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 'திருச்சிலுவையின் மகிமை', 'சிலுவையின் வெற்றி' 'பெருமைமிகு திருச்சிலுவை நாள்' 'உயிர்வழங்கும், அரிய சிலுவை உயர்த்தப்பட்ட நாள்' என்பன, இவ்விழாவைக் குறிக்கும் ஒரு சில சொற்றொடர்கள்.
கிறிஸ்தவ மறையைத் தழுவிய கான்ஸ்டன்டைன் என்ற உரோமையப் பேரரசரின் அன்னை, புனித ஹெலெனா அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தில், இயேசு அறையப்பட்டத் திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. 
புனித பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு புனித ஹெலெனா தூண்டப்பட்டார். அவ்விடத்தில் அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச் சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா அவர்கள் ஒரு சோதனையை மேற்கொண்டார். மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும், குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.
அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனிதக் கல்லறை கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத் தேதிகளில் இக்கோவில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பெரியத் துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

August 9 – St. Juana Cipitria Barriola.
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை'
1845ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் பிறந்த Juana Cipitria Barriola அவர்கள், வறுமையில் வாடிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற, சிறுவயதிலேயே பிற இல்லங்களில் பணி செய்த
ார். Salamanca என்ற நகரில் வேலை தேடிச் சென்ற இவர், அந்நகரில் நிலவிய வறுமையை ஒழிக்க உறுதி பூண்டார்.
"நான் கடவுளுக்கு மட்டுமே உரியவள்." என்று அடிக்கடி கூறி வந்த Juana அவர்கள், 23ம் வயதில் இறை அழைப்பை ஏற்றார். 1871ம் ஆண்டு, 'இயேசுவின் புதல்வியர்' என்று அழைக்கப்படும் துறவு சபையை ஆரம்பித்தார். இயேசுவின் கேன்டிடா மரியா (Candida Maria de Jesus) என்ற பெயருடன் தன் அருள் பணிகளைச் செய்தார்.
Juana அவர்கள் ஆரம்பித்தத் துறவுச் சபை, புனித இலயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இத்துறவு சபை, 1902ம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் அங்கீகாரம் பெற்றது. வறுமைப்பட்ட பெண் குழந்தைகளின் கல்வியில் இத்துறவுச் சபை அதிகம் ஈடுபட்டது. 
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் பணிபுரிந்த Juana அவர்கள், 1912ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவரது 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1996ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். 2010ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் கேன்டிடா மரியா அவர்களைப் புனிதரென அறிவித்தார்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் 
(The Presentation of Our Lady) 
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா, கிழக்குலகில் மிகவும் தூய இறையன்னை ஆலயத்துக்குள் நுழைந்தது எனக் கொண்டாடப்படுகிறது. அன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதி
ய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன. குழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James), இவ்வாறு வாசிக்கிறோம். மரியாவின் பெற்றோராகிய சுவக்கீன், அன்னா ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாவும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு மரியா தனது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார் என்று யாக்கோபு எழுதியுள்ளார். மரியாவின் பிறப்பு நற்செய்தி (Gospel of the Nativity of Mary) யில், மரியாவின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியா ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவனின் அன்னையாகும் நிலைக்கு தன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. பைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன் சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி.பி.543ம் ஆண்டில் தூய கன்னிமரியாவுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 614ம் ஆண்டில் 2ம் Khosrau, எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் நீக்கினாலும், 1585ம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இதனை மீண்டும் உரோமைத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார். தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


No comments: