னித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் (The visitation of the blessed virgin Mary)
இத்திருநாள், தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் 1263 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்களவார்த்தை சொன்னபிறகு, சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தம்மாளை சந்தித்த நேரத்தில்தான், கன்னிமரி "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்ற தமது ஒப்பற்ற புகழ்ப்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும், 3 வாரங்கள் தங்கி எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்து வந்தார். அன்னை மரியாள் அன்று பாடிய பாடல் ஓர் நன்றியின் பாடல். இறைவன் தன்னைத் தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்துகிறார் மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும், நன்றி மனப்பான்மையுடன் பாடுகின்றார்.
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத், மரியாவை பார்த்துக் கேட்டார். "என் ஆண்டவரின் தாய்" என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே, மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருள் அடையாளத்தைஸ் செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகு மரியன்னையைப் பாராட்டுகின்றார். "ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறுவதன் வழியாக, மரியாவின் ஆன்மீகம் அடித்தளமாக அமைவது, அவரது ஆழமான விசுவாசம் என்பதை எலிசபெத் சுட்டிக்காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் "வாக்குறுதியின் பெட்டகமே" என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது, வாழ்த்துகின்றது.
"வாக்குறுதியின் பெட்டகம்" யூதர்களிடம் இருந்த நாள் வரை, யூதர்கள் இறைப்பிரசன்னத்தையும் யாவேவின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான், மரியன்னை உலக முடிவுவரை, இறை இயேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க, யூத மக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடி மகிழ்ந்தார். அதேபோன்றுதான் எலிசபெத்தின் வயிற்றினுள் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும், யெருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாகக் கூட்டி சேர்த்தது. அதேபோன்று எல்லோருக்கும் முதல்வராக, நற்செய்தி மறைபரப்பாளராக, எலிசபெத்திடம் தமக்கு தேவதூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை அறிவிக்க சென்றதன் வழியாக, உலக முடிவு வரை, வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதை அறியப்படுகின்றது.
மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறுபெற்றிருந்தார். கடவுளின் திட்டத்தை அறிந்தார். தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும், இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான அன்பான இறைவா! இதோ உமது அடிமை என்று கூறி, தன்னை முழுவதும் உம்மிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாள் நாங்களும் அன்னையின் பக்தர்களாக வாழ்ந்து, அன்னையைப்போல பிறருக்கு உதவி செய்து, நாங்கள் என்றும் உம் திட்டத்திற்கு ஆம் என்று கூறி, உமது அடிமைகளாக வாழ வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

தனது சாதுரியமான பேச்சால் இத்தாலியைக் காப்பாற்றியவர் (St. Leo the Great)
அக்காலத்தில் ஐரோப்பாவில் ஹூன் இனப் பேரரசு, ஜெர்மனியின் ரைன், டான்யூப் ஆற்றுப் பகுதிகளை உள்ளடக்கி, பால்டிக் கடல் வரை பரவியிருந்தது. ஹூன் பேரரசின் படைத்தலைவரான அத்தில்லா என்பவர், உரோமைப் பேரரசர் மூன்றாம் வலென்டீனியனின் சகோதரியான ஹொனோரியா என்பவரை மணந்துகொள்ள விரும்பினார். எனவே மணப்பெண்ணை மிகுந்த செல்வங்களோடு தன்னிடம் அனுப்பித்தர வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் உரோமைப் பேரரசின்மீது போர்தொடுக்கப் போவதாகவும் மிரட்டினார் அத்தில்லா. ஆனால் வலென்டீனியன் தன் சகோதரியை அனுப்ப மறுத்துவிட்டார். அதேநேரம் கி.பி.452ம் ஆண்டில் அத்தில்லா வட இத்தாலியின்மீது படையெடுத்து Aquileia போன்ற பல நகரங்களைச் சூறையாடி உரோமை நோக்கி வந்து கொண்டிருந்தார். எனவே அத்தில்லாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, திருத்தந்தை லியோ அவர்கள் தலைமையில் மூன்றுபேர் கொண்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பினார் உரோமைப் பேரரசர் வலென்டீனியன். திருத்தந்தை லியோ அவர்கள், அத்தில்லாவை மாந்துவா நகரில் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். அத்தில்லாவும் அவருடைய படைகளும் படையெடுப்பைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. மேலும், திருத்தந்தை லியோ அவர்கள், அத்தில்லாவின் முன்நின்று பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில், பிரமாண்டமான ஒரு மனிதர், குருவுக்கு உரிய உடையை அணிந்துகொண்டு, கையில் ஒரு வாளை ஏந்தியவராய் தன்னையும் தனது படையையும் மிரட்டியது போன்ற ஒரு காட்சியை அத்தில்லா மட்டும் பார்த்ததாகவும், அதனால் பயந்துபோன அத்தில்லா பணிந்தார் எனவும் ஒரு வரலாற்றாசிரியர் எழுதி வைத்துள்ளார். புனித திருத்தந்தை முதலாம் லியோ அவர்கள், திருஅவை வரலாற்றில் "பெரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார். இத்தாலியன் டஸ்கன் மாநிலத்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர், கி.பி.440ம் ஆண்டுமுதல் 461ம் ஆண்டு அவரின் இறப்புவரை திருஅவையை வழிநடத்தினார். கால்செதோன் நான்காம் பொதுச் சங்கத்தில், கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள் குறித்த கிறிஸ்தியல் விவாதத்தில் இவரின் பங்கு பெரிதும் பாராட்டப்படுகிறது. திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்கள் விழா நவம்பர் 10.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ஃபவுஸ்டினா (St. Faustina Kowalska)
பிறப்பு : ஆகஸ்ட் 25, 1905, குலோகோவிச், ரஷியப் பேரரசு, (Głogowiec, USSR)
இறப்பு : அக்டோபர் 5, 1938 (அகவை 33), க்ராக்கோவ், போலந்து, Kraków, Poland)
அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
புனிதர் பட்டம் : 30 ஏப்ரல் 2000, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், வத்திக்கான்

மரிய ஃபவுஸ்டினா கோவால்ஸ்கா போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இக்குறிப்புகள் பின்னாளில் (Diary: Divine Mercy in My Soul) என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தனது 20ம் வயதில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மிக்கேல் ஸ்போகோ என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.
இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வண்ணமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது.

1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும், வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும், அது கண்டு பிடிக்கப்பட்டதனால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் நினைவுத் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.
இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் நினைவுத் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
May 22 - St. Rita of Cascia - (1381-1457) புனித ரீட்டா.(St.Rita) - குடும்பத்தலைவி, துறவி(Widow, nun)
ரீட்டா கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்பிரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்துவந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள். ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக்கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார்.
ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்துகொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்கவேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா. உடனே பெற்றோர் பவுலோ பெர்டினாண்டோ என்பவருக்கு ரீட்டாவைத் திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அய்யோ பாவம் ரீட்டா! கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூரக்குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சாநெஞ்சத்துடன் அனைத்து துன்பக்கலனையும் ஏற்றுக்கொண்டார். கணவர் மனம்மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.
பின்னர் இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழித்தவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார். இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள்.
இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனமாறவில்லையென்றால் இறைவனை அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.
ரீட்டா இவர்களின் இறப்பிற்குப்பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ அறமுயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார். ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது.
அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள். அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார்.
அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்துக்கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் இவரிடமிருந்து அருள்பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ஆம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்டபிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.
ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர்பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத்தணிக்கையில் இடம்பெற்றுள்ளது.
செபம்:
தந்தையே நீர் விரும்பினால் இத்துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும் என்று ஜெபித்த இயேசுவே! உம் பெயரை இவ்வுலகில் நிலைநாட்ட மறைசாட்சிகளாய் மரித்தவர்களை நீர் கருணை கண்கொண்டு நோக்கியருளும். மரித்த ஒவ்வொரு ஆன்மாக்களும் இம்மண்ணில் வெற்றியடைய உம் வரம் தாரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித வால்ட்ரூட் (St.Waltrude)
656 ல் ஓர் துறவியாக முடிவு செய்து துறவியானார். இவர் வாழ்ந்த அக்காலத்தில் அரசர்கள் கைதிகளை மலைகளுக்கு அனுப்பி தண்டனை கொடுத்தார்கள். கைதிகள் தங்கள் வாழ்நாட்களை மலைபகுதிகளிலே கழிக்க வேண்டியதாக இருந்தது. அப்போது வால்ட்ரூட் பெல்ஜியத்தில் மலைகளில் வாழ்ந்த கைதிகளுக்காக போராடி, உதவி செய்து வந்தார். நாளடைவில் கைதிகளை கொண்டு, வால்ட்ரூட் தானே சொந்தமாக, தனது பெயரிலேயே ஓர் சபையை நிறுவினார். பெல்ஜியத்திலுள்ள மோன்சில் புனித வால்ட்ரூட் சபை உள்ளது.
688 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் வால்ட்ரூட் பெல்ஜியத்திலுள்ள மோன்ஸ் (Mons) மலையில் இறந்தார். பெல்ஜியத்தில் புனித வால்ட்ரூட் மலையில் இவர் பெயரில் பேராலயமும், கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பெல்ஜிய மலைகளில் இன்றுவரை புனித வால்ட்ரூட் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் மலைகளின் பாதுகாவலர் என்றழைக்கப்படுகின்றார்.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! மலைகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வதியும். விஷ பூச்சிகளிடமிருந்து காத்து வழிநடத்தியருளும். இயற்கையின் வழியாக உம்மைப் புகழ்ந்திட வரம் தாரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph) - -குரு
இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னைமரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார். அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திருந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார். அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள். அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.
அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார். இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித ஹெர்மான் அன்னைமரியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரது அன்பையும், பாசத்தையும் பெற்று நாங்கள் என்றும், அன்னைமரியின் பிள்ளைகளாக வாழ உம் அருளை எமக்கு பொழிந்தருளும். ஆமென்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித பாஸ்காலீஸ் பேலோன்
இவர் பிறந்து வளர்ந்த உடன் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். இதனால் ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்தார். இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதே இல்லை. ஆனால் இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும் போது கடவுளின் படைப்பை கண்டுரசித்து, அதன்வழியாக கடவுளை வழிபட்டு அவரோடு தொடர்புகொண்டார்.
தனக்கு 17 வயது நடக்கும்போது பிரான்சிஸ்கன் சபையில் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அப்போதுதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள்விப்பட்டு, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டார். இதனால் இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இவரது ஆழமான விசுவாசத்தை கண்ட அச்சகோதரர்கள் இவரை தங்கள் சபையில் சேர அனுமதித்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள் அச்சகோதரர்களையும், பாஸ்காலிஸ்சையும் தவறாக பேசினர். இதனால் பாஸ்காலிஸ் மிகவும் வேதனைப்பட்டார். இருப்பினும் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் அவரை ஊக்கமூட்டி, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றனர். பின்னர் அச்சபை தலைமை சகோதரர் அவர்களின் அறிவுரைப்படி, இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரராக வாழ முழுமனதுடன் விருப்பம் தெரிவித்தார்.
அதன்பிறகு 1564 ஆம் ஆண்டு மான்போர்ட் சபை சகோதரர்கள் பாஸ்காசிசை தங்கள் சபைக்கு கடனாக தர வேண்டி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் வற்புறுத்தலால் சில வருடங்களுக்கு கடனாக மான்போர்ட் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் ஏழ்மையில் வாழ்ந்து, எளிமையான வாழ்வை மேற்கொண்டு சில துறவற மடங்களை ஏற்படுத்தினார். அவர் ஏற்படுத்திய துறவற மடங்களில், சிறிய சிறிய பணிகளில் அமர்த்தப்பட்டு, அவற்றை திறம்பட இறைவனின் மகிமைக்காக செய்தார். அவர் மான்போர்ட் சபையில் இருந்தாலும் கூட, பிரான்சிஸ் சபையின் ஒழுங்குகளை தவறாமல் கடைபிடித்து வந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். அவர் திவ்விய நற்கருணை பேழையின் முன் மணிக்கணக்காக அமர்ந்து செபிப்பார். அதிலிருந்துதான் அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ்வில்லத்திலுருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொடர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங்கள் இன்று வரை நடந்து வருகின்றது.
இவர் ஸ்பெயின் நாட்டு புனிதர்களில் மிக உயர்ந்த புனிதராக அழைக்கப்படுகின்றார். 1897 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் பலிபீட திருவருட்சாதனத்தின் பாதுகாவலர் என்றழைக்கப்பட்டார். இவர் இறந்த 100 வருடங்களுக்குப்பிறகு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! திவ்விய நற்கருணையின் மீது அளவில்லா நம்பிக்கைக்கொண்டு, வாழ்விற்குத் தேவையான சக்தியை புனித பாஸ்காலிஸ் பெற்றுக்கொண்டார். நாங்களும் அவரைப் போல திவ்விய நன்மை உட்கொண்ட பிறகு உம்மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழ எமக்கு உமது ஆசீர்வாதங்களைத் தாரும்.

திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence) – மறைசாட்சி
இவர் உரோமைத் திருச்சபையின், திருத்தந்தை புனித 2 ஆம் சிக்ஸ்டஸிடம் (Pope Sixtus II) திருத்தொண்டராக இருந்தார். அப்போது மாமன்னன் வலேரியன் (Valerien) கிறித்தவர்களை அடக்கி, ஒடுக்கி துன்புறுத்தினான். அந்நேரத்தில் திருத்தந்தை 2 ஆம் சிக்ஸ்துவையும் அவருடன் இருந்த நான்கு திருத்தொண்டர்களையும் பிடித்து சென்று கொன்றான். அவர்கள் மரித்த நான்காம் நாளே லாரன்சும் மறைசாட்சியாக எரித்துக்கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார். அரசன் கேட்ட கேள்விகளுக்கு லாரன்ஸ் கூறிய விடைகளை அரசன் தவறாக புரிந்துகொண்டான். அதனால் லாரன்சை ஒரு இரும்புக்கட்டிலில் போட்டு அதற்கடியில் நெருப்பு வைத்து கொளுத்தி கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால் லாரன்சோ, நெருப்பில் வேகும்போது இறைவனைப் போற்றி புகழ்ந்து செபித்தார். தன் உடல் முழுவதும் எரிந்த பிறகு, நன்றாக வெந்துவிட்டது, திருப்பிப்போடுங்கள் என்றார். இவரது கல்லறை காம்போ வேரோனா என்ற பகுதியில் தீபூர்த்தினா சாலை அருகே உள்ளது. அக்கல்லறையின்மேல் மாமன்னர் கொன்ஸ்தான்சியுஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினார். 4 ஆம் நூற்றாண்டிலேயே இப்புனிதரின் பக்தி பரவியது.
செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! தனது வாழ்வை மக்களின் பணிக்காகவும், உமது இறையரசின் மேன்மைக்காகவும் அர்ப்பணித்து மறைசாட்சியாக மரித்த புனித லாரன்சை நினைத்து உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். அவர் உம்மை அன்பு செய்ததுபோல, நாங்களும் உம்மை அன்பு செய்து அவர் போதித்த வாழ்வின்படி நாங்கல் வாழவும், நீர் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புனித மகதலா மரியா (St. Mary Magdalene)
இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். இவரிடமிருந்துதான் இயேசு ஏழு பேய்களை ஓட்டினார். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர்.
மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். " என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப்பற்றி கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார்.
செபம்:
அதிசயம் செய்பவரே எம் இறைவா! பாஸ்கா மகிழ்ச்சியின் முதல் நற்செய்தியை நீர் மரியா மகதலாவிற்கு தந்து எம்மை மகிழ்ச்சிபடுத்தினீர். நாங்களும் மரியாவைப்போல இயேசுவைப்பற்றி கொண்டு, உம் நற்செய்தியை இவ்வுலகில் பரப்ப, தேவையான திடம் தந்து காத்திடுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.

மனைவியாக, அன்னையாக, அரசியாக, புனிதராக... (Saint Margaret of Scotland)
11ம் நூற்றாண்டில் இங்கிலாந்து இளவரசியாக வாழ்ந்தவர் மார்கரேட். நார்மன் இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றியதும், இளவரசி மார்கரேட் அவர்கள், தன் தாய், மற்றும் சகோதரருடன் ஹங்கேரி நாட்டிற்குச் செல்ல கப்பலேறினார். புயலில் சிக்கிய கப்பல், ஸ்காட்லாந்து நாட்டின் கரையில் ஒதுங்கியது. மார்கரேட்டின் அழகும், குணமும் ஸ்காட்லாந்து அரசன் மால்கம் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. 1070ம் ஆண்டு இருவரும் திருமணம் புரிந்தனர்.
மன்னர் மால்கம் இயல்பிலேயே நல்லவர் என்றாலும், அவருக்கும், அரசவையில் இருந்தவர்களுக்கும் படிப்பறிவில்லாத காரணத்தால், கீழ்த்தரமான பேச்சும் பழக்கவழக்கங்களும் கொண்டிருந்தனர். அரசி மார்கரேட் அவர்களுக்கு கல்வி புகட்ட ஆசிரியர்களைக் கொணர்ந்தார். தன் நடத்தையாலும், அறிவுரைகளாலும் மன்னருக்கும், மற்றவருக்கும் உயர்ந்த பழக்க, வழக்கங்களைக் கற்றுத்தந்தார். அரண்மனையில் ஏற்பட்ட மாற்றம், நாட்டிலும் பரவ ஆரம்பித்தது. ஸ்காட்லாந்து மக்கள் அனைவரும் கல்வி பயில்வதற்கு அரசி மார்கரேட் வழிவகுத்தார்.
நாட்டிலிருந்த கோவில்கள் அனைத்தையும் புதுப்பிப்பதில் அரசி மார்கரேட் அவர்கள், தனி ஆர்வம் காட்டினார். திருப்பலிக்கு அருள் பணியாளர்கள் அணியும் உடைகளில், தன் கைப்பட பூவேலைப்பாடுகள் செய்து கொடுத்தார், மார்கரேட்.
தவக்காலம், திருவருகைக்காலம் ஆகிய வழிபாட்டுக் காலங்களில் மன்னரும், அரசியும், கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, வழியில் சந்திக்கும் வறியோரின் காலடிகளைக் கழுவி, அவர்களுக்குத் தேவையான பொருள் உதவிகள் செய்தனர். இவ்விருவருக்கும் பிறந்த 8 குழந்தைகளை புண்ணிய வாழ்வில் வளர்ப்பதில் இருவரும் அதிக கவனம் செலுத்தினர்.
1093ம் ஆண்டு, மன்னர் மால்கம் அவர்களும், மூத்த மகன் எட்வர்ட் அவர்களும் போரில் இறந்தபோது, அரசி மார்கரேட் அவர்கள் ஆழ்ந்த வேதனை கொண்டார். அவர்கள் இறந்த நான்காம் நாள் மார்கரேட் அவர்களும் தன் 48வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர், 1250ம் ஆண்டு, திருத்தந்தை 4ம் இன்னொசென்ட் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டு, ஸ்காட்லாந்து நாட்டின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார். ஸ்காட்லாந்து நாட்டு புனித மார்கரேட் (Saint Margaret of Scotland) அவர்களின் திருநாள், நவம்பர் 16ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
May 30 - புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )- பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலி (Patron of France)
இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர். பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர். பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.
இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.
இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார்.
1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார். அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.
இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார். செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார்.
இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர். அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார்.
எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார். பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.
செபம்:
வழிநடத்துபவரே எம் இறைவா! எதிரிகளால் எம் நாட்டு மக்கள் தாக்கப்படும்போது, வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்கின் துணைகொண்டு, எம் மக்களை நாங்கள் காத்தருள, நீர் துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புதுநன்மை பெறுவோரின் பாதுகாவலர்
5 வயது நிறைந்த இமெல்டா (Imelda Lambertini), திருநற்கருணையைப் பெறுவதற்கு அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டில், திருநற்கருணையைப் பெறுவதற்கு, குறைந்த அளவு, 12 வயதாகிலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஒவ்வொரு நாளும், திருப்பலிக்கு முன்னர் அச்சிறுமி பங்குத் தந்தையிடம் தன் ஆவலை வெளியிட்டாலும், பங்குத் தந்தை அவரிடம் காத்திருக்குமாறு கூறிவந்தார்.
தன் 9வது வயதில் சிறுமி இமெல்டா தொமினிக்கன் துறவு மடத்தில் இணைந்தார். 1333ம் ஆண்டு இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்தின நாள், சிறுமி இமெல்டாவின் ஆவல் அற்புதமாக நிறைவேறியது. 10 வயதான சிறுமி இமெல்டா, அன்றையத் திருப்பலி முடிந்தபின், கோவிலில் தனித்து செபித்துக் கொண்டிருந்தார். திருப்பலிப் பீடத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்த அருள் சகோதரி ஒருவர், இமெல்டாவுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் கண்டார். அதாவது, சிறுமி இமெல்டாவுக்கு முன், திவ்ய நற்கருணை, ஒளிவடிவில் மேலிருந்து இறங்கி வந்தது. இதைக் கண்ட அருள் சகோதரி, உடனடியாகச் சென்று பங்குத் தந்தையையும், ஏனைய அருள் சகோதரிகளையும் அழைத்துவந்தார். திருநற்கருணையைக் கண்டதும், பங்குத்தந்தை, திருப்பலி உடைகளை மீண்டும் அணிந்து வந்து, அந்தரத்தில் ஒளிவீசியபடி நின்ற அந்த நற்கருணையை கையில் ஏந்தி, அதை, சிறுமி இமெல்டாவுக்கு வழங்கினார். திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட இமெல்டா, கண்களை மூடி, ஒரு புன்னகையுடன் செபித்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று மற்றவர்கள் கோவிலை விட்டுச் சென்றனர்.
பல நிமிடங்கள் சென்று, துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி, சிறுமி இமெல்டாவை அழைத்துச்செல்ல கோவிலுக்கு வந்தார். செபத்தில் ஆழ்ந்து, மகிழ்வுடன் காணப்பட்ட சிறுமி இமெல்டாவின் உயிர் பிரிந்திருந்தது. 1826ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் லியோ அவர்கள், இச்சிறுமியை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார். புதுநன்மை பெறும் அனைவருக்கும் இமெல்டா இலம்பெர்த்தினி பாதுகாவலராக விளங்குகிறார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
April 1 - St. Hugh of Grenoble - (1052-1132) - புனித.ஹியூகோ
கி.பி. 1053 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள வாலேன்சா (Valenza) என்ற ஊரில் ஹியூகோ பிறந்தார். ஆழ்ந்த இறைப்பற்றுக்கொண்ட இவர் பெற்றோர், தன் மகனை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும், வளர்த்தெடுத்தார்கள். சிறுவயதிலிருந்தே இறைவனை நாடி செபிப்பதில் இவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இவரது இறைப்பற்றும், ஆன்மீக தாகமும் இவருடன் படித்த மற்ற மாணவர்களுக்கும் ஊரில் உடன் வாழ்ந்த சிறுவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் இருந்தது. தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து அன்பு செய்வதிலும், மகிழ்ச்சிப்படுத்துவதிலும் சிறந்தவராக இருந்தார். தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, ஆலய பணிகளில் ஈடுபட்டு புதிய பாடல்களை உருவாக்கி, திருப்பலியில் பக்தியோடு பாடி தனது வாழ்வை ஆலயத்திலேயே செலவழித்தார்.
அன்றாட கல்வாரி பலியில் பங்கெடுத்த ஹியூகோ தானும், ஓர் குருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இறைவனால் தூண்டப்பட்டு, தனது விருப்பத்தை அன்றைய நாளில் ஆயராக இருந்தவரிடம் தெரிவித்து, குருமடத்தில் சேர்ந்து குருவானார். குருவான நாளிலிருந்து இவரின் அற்புதமான மறையுரையால் பலரின் பாதைகளை மாற்றி இறைவன்பால் ஈர்த்தார். இதனையறிந்த மற்ற ஆயர்களும், குருக்களும் இவரை ஆயராக திருநிலைப்படுத்த தயார் செய்தனர். ஆனால் தான் ஓர் ஆயராக விருப்பமில்லை என்று தெரிவித்தார். மீண்டும் பல ஆண்டுகள் சென்று தூய ஆவியானவரால் உந்தப்பட்டு, பலரின் விருப்பத்தை நிறைவேற்ற ஆயராக பொறுப்பேற்க சம்மதித்தார்.
1082 ஆம் ஆண்டு இவர் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரனோபிள் என்ற மறைமாநிலத்தில் 52 ஆண்டுகளாக பணியாற்றினார். ஆயர் பொறுப்பை ஏற்ற 2 ஆண்டுகளில் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தார். இவற்றை சமாளிப்பதற்காக ஓர் ஆண்டுகாலமாக புனித பெனடிக்ட் நவதுறவகத்தில்(Novitiate) தங்கி இறைவேண்டுதலில் ஈடுபட்டார். பின்னர் திருத்தந்தை ஏழாம் ஜார்ஜ் (George VII) அவர்களின் அனுமதி பெற்று, ஆயர் பொறுப்பிலிருந்து விலகி, கர்தாய்சர் (Kartaeuser) துறவறமடத்தில் தங்கி, பல மணிநேரம் இறைவனோடு ஒன்றிணைந்திருந்தார். கர்தாய்சர் சபையில், இவரும் ஒருவராக இருந்ததால் 1084-ல் புரூனோ (Bruno) என்ற பெயர் பெற்று அச்சபையின் உறுப்பினரானார்.
பின்னர் மீண்டும் இவர் பிரான்ஸிலுள்ள கிரனோபிள் மறைமாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு ஓர் புதிய துறவற மடத்தை துவங்கினார். அப்போதுதான் சபையிலுள்ள ஒவ்வொரு துறவிகளும் ஒரு சிறிய குகை போன்ற அறைகளில் தங்கி, மிகவும் ஏழ்மையான, கடுமையான வாழ்வை வாழ்ந்து, அற்புத பாடல்களால் இறைவனை போற்றி புகழ்ந்தனர். இதனால் இவர் ஆயராக இருந்தபோது பலவிதங்களிலும் துன்பத்தை கொடுத்தவர்கள், மனந்திரும்பி, செபவாழ்வினால் ஈர்க்கப்பட்டு, அன்பினால் தூண்டப்பட்டு ஹியூகோவால் தொடங்கப்பட்ட துறவற மடத்தில் சேர்ந்து இறைவனின் சாட்சியானார்கள். பின்னர் கிரனோபிள் என்ற நகரம்தான் கர்தாய்சர் சபையின் மிகப்பெரிய துறவற இல்லமாக விளங்கியது.
பிறகு 1132 ஆம் ஆண்டு ஆயர் ஹியூகோ அவர்கள் இறைவனின் வானக வீட்டை அடைந்தார். இவர் இறக்கும் நிமிடம்வரை கர்தாய்சர் சபைக்காகவும், தனது மறைமாநில கிரனோபிள் மக்களாகவும் கடுமையான ஒருத்தல்களைச் செய்து, இடைவிடாது செபித்தார். கிரனோபிள் மக்கள் விரும்பியதால் இவர் அங்குள்ள பேராலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். மிகுந்த வறட்சியாலும், பசியாலும் வாடிய மக்கள் இவரை அண்டி வந்து செபித்தபோது, பல விதமான அற்புதங்களையும், அதிசயங்களையும் கண்டனர். இவர் இறந்த இரண்டாண்டுகளுக்குப்பிறகு ஏப்ரல் மாதம் முதல் நாள் 1132 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கலாம் என்று திருஅவையால் பேசப்பட்டது. கி.பி. 1134 ஆம் ஆண்டு திருத்தந்தை 2 ஆம் இன்னொசென்ட் (Pope Innocent II) அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! நாங்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்படும்போது, புனித ஹியூகோவைப் போல உம்மை இறுகப்பற்றிக்கொண்டு, மற்றவர்களை மன்னித்து, அன்பு செய்து, உம்மை மகிமைப்படுத்தி, உமக்காக வாழ வரம் தாரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
June 24 - திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist)
இவரது பிறப்பை லூக்கா நற்செய்தியாளர் முன்னறிவித்தார். யோவானின் தாய் எலிசபெத் கருவுற இயலாதவர். இவரும் செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள். வானதூதர் யோவானின் பிறப்பை செக்கரியாவிடம் அறிவித்தார்கள். ஆனால் அவர் ஆண்டவரின் செயலை நம்பவில்லை. அது நிறைவேறும் வரை அவர் பேச இயலாதவராக தண்டனை பெற்றார். கருவுற்றிருந்த எலிசபெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றருந்தவருமான மரியா சந்தித்தார். மலை நாடுகளை கடந்து முதன்முறையாக மறைபரப்பு பணியாளராக எலிசபெத்திடம் நற்செய்தி அறிவித்தார். எலிசபெத் மரியாவின் வாழ்த்துரையை கேட்ட நேரத்தில், அவள் வயிற்றினுள் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளிற்று. (லூக். 1:42-44).
மறைவல்லுநர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் மீட்பர் இயேசுவின் வருகையினால் தாயின் வயிற்றிலிருந்த யோவான் பாவ மீட்பு பெற்று புனிதராக்கப்பட்டார் என்பார்கள். திருமுழுக்கு யோவான் பிறந்தபின் இறைவனால் குறிக்கப்பட்ட நாட்களில் பாலை நிலத்தை நாடி மீட்பரின் வழியை ஆயத்தம் செய்யவும், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்கு பெறவும், மக்களை ஆயத்தம் செய்கிறார். (மாற்கு 1:2-43)
திருமுழுக்கு பெற வந்த கூட்டத்தினரில் ஒருவராக மீட்பர் இயேசுவும் வருகிறார். தாமும் திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு கேட்கும்போது யோவான் பதறி போகின்றார். இவரின் ஆழமான தாழ்ச்சியும் இறை இயேசுவிடம் கொண்டிருந்த வணக்கமும் இவரது சொற்களில் மிளிர்கின்றன. அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதியில்லை (மாற்கு 1:7). யோவான் நற்செய்தியாளரும் இதே மனப்பான்மையை வெளிக்கொணருகின்றார். எனக்கு பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரை பற்றியே சொன்னேன் என உரத்த குரலில் சான்று பகிர்ந்தார். (யோவான் 1:5)
யோவானின் சீடர்கள் ரபி, யோர்தான் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே, நீரும் அவரை குறித்து சான்று பகர்ந்தீரே, இப்போது அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடம் செல்கின்றனர் என்றார்கள் அப்போதும் யோவானின் பதில் அவரது ஆழமான ஆன்மீகத்தை காட்டுகின்றது. "நான் மெசியா அல்லேன், மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு மறைய வேண்டும் (யோவான் 3:25-30). இவருடைய சீடர் இவருக்கு மிகப்பெரிய இறைவாக்கினருக்குரிய மதிப்பு கொடுத்து நடந்து வந்தபோது, நான் மறையவேண்டும், அவர் வளரவேண்டும் என்ற பதில் அவரது ஆழமான தாழ்ச்சியை வெளிக்கொணர்கிறது.
இவ்வாறு எந்த அளவுக்கு தம்மையே அவர் தாழ்த்தினாரோ அந்த அளவுக்கு அவரை எல்லார் முன்னிலையிலும் இயேசு வானளாவ உயர்த்திவிட்டார். இறைவனின் பணியை செய்யும்போது இவரிடத்தில் வெளிப்பட்ட மனத்துணிவையும், முகத்தாட்சண்யம் இன்மையும் நாம் நினைவு கூர்வோம். இவர்தம் உயிரை நீதிக்காக தியாகம் செய்கின்றார். யோவான் ஏரோதிடம், நீர் அவளை (பிலிப்பின் மனைவியை) வைத்திருப்பது முறையன்று என்று சொல்லி வந்தார். இதன் விளைவாக, யோவான் சிறையிலடைக்கப்பட்டார். அவரது தலை கொய்யப்பட்டது. (மத். 14: 1-12)
புனித அகஸ்டின் இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தில் இவ்வாறு விளக்கம் தருகின்றார். செக்கரியா, யோவானின் பிறப்புக்குப்பிறகு மீண்டும் பேசும் ஆற்றல் பெற்றார். இதனையும், கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்டபொழுது ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்ததையும் அகஸ்டின் இணைத்து பார்க்கிறார். திருமுழுக்கு யோவான் தமது வருகை பற்றியே அறிவித்திருந்தால், செக்கரியாவுக்கு மீண்டும் பேச நாவன்மை கிடைத்திருக்காது. நா கட்டவிழ்க்கப்பட்டதனால் குரலுக்கு வழிபிறந்தது. "நீர் யார்" என்று யோவானை கேட்டபோது " பாலைவனத்தில் எழும் குரலொளி நான்" என்றே விடையளிக்கின்றனர். யோவானின் குரல் சிறிது காலத்திற்கே நீடித்தது. வார்த்தையாம் கிறிஸ்து என்றென்றும் உள்ளவர்.
செபம்:
இரக்கத்தின் இறைவா! உண்மையை உரைத்ததற்காக யோவான் தன் உயிரை ஈந்தார். இவரை போல இன்று ஏராளமான இறைப்பணியாளர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். இவர்களின் பாவங்களை மன்னித்து, உம் வான் வீட்டில் சேர்த்தருளும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித எப்ரேம் (St.Ephrem) - மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்
இவரின் பெற்றோர்கள் பற்றியும், இவரது குருத்துவத்தைப்பற்றியும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது. கிறிஸ்துவின் ஒளிபெறாத பெற்றோர் என்று கூறப்படினும், எப்ரேம், "உண்மையின் வழியில் பிறந்தவன் நான்" கூறுவதிலிருந்து, இவரின் பெற்றோர் ஞான ஒளி பெற்றவர்கள் என்று நம்ப இடமுண்டு, மேலும் இவர் தியோக்கான் என்று அழைக்கப்பட்டாலும், குருத்துவ மகிமை பெற்றிருந்ததாக அவர் எழுதியவற்றிலிருந்து தெரிகிறது. இவர் தமது 18 ஆம் வயதில் திருமுழுக்குப் பெற்றார். அன்று முதல் நிசிபிஸ் நகர் ஆயர் புனித ஜேக்கப்பின் கண்காணிப்பில் இருந்தார். ஆயர் 325 ல் நிசேயா என்ற பொது சங்கத்திற்கு போகும்போது எப்ரேம்மையும் தன் செயலராக அழைத்து சென்றார். அப்போது ஆயர் இறந்து போகவே நிசிபிசிலேயே தங்கினார். அங்கே பெர்சியர்கள் படையெடுத்து வந்த வேத கலாபனையை பாடல்களாக தொகுத்தார். பின்னர் 350 ஆம் ஆண்டில் திருச்சபைக்கு இருந்த ஆபத்து நீங்கியது. வேதகலாபனை போரில் பெர்சியர் தோல்வி அடைந்தனர். 13 ஆண்டுகளுக்குப்பின் மன்னன் ஜோவியன் ஆட்சிக்காலத்தில் அமைதியின் பயனாக, நிசிபிஸ் நகரை பெர்சியாவுக்கு கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த எப்ரேம் எடெஸ்ஸாவுக்கு அருகில் தனிமையை நாடிச்சென்று ஒரு குகையில் நாட்களை செலவழித்தார். அங்கு கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். திருவழிபாட்டில் மக்களின் மனதை இறைவன்பால் எழுப்பும் ஆற்றல் திருப்பாடல்களுக்கு நிறையவே உள்ளது என்பதை இவர் உணர்ந்தார். திருவழிபாட்டில் "திருப்பாடல்களின் தந்தை" என்ற பட்டம் இவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டது. இவர் பெண்களின் பாடற்குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறுதிவரை தியாக்கோனாகவே இருந்தார். இவர் பல நூல்கள் எழுதினார். அனைத்திலுமே தான் ஓர் குருத்துவத்தை தேர்ந்துகொண்டதாகவே எழுதியுள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும் " இவருடைய நாட்களில் மக்கள் எப்படி விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்து வந்தனர். திருச்சபையில் எத்தகைய வழிபாட்டு முறைகள் நிலவி வந்தன என்பதை காட்டுகின்றது. அதேபோல் அன்னை மரியா எத்தகைய மாசு மறுவுமின்றி உற்பவித்தவர் என்று இவர் குறிப்பிடும்போது, அவரது நாட்களில் இவ்வுண்மையை விசுவாசிகள் தெரிந்து வைத்திருந்தனர். தாழ்ச்சியின் பொருட்டு, தமது அடக்க சடங்கின்போது, தம் உடலுக்கு தூபங்காட்ட வேண்டாம். இறைவனுக்கு மட்டுமே நறுமணத் தூபம் உரியது என்றும், ஆன்ம சாந்திக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது மட்டுமே சிறந்தது என்று கூறினார்.
எப்ரேம் 370 ஆம் ஆண்டில் கப்படோசியாவில் இருந்த புனித பாசிலை சந்தித்தார். ஏற்கெனவே பசிலியாரின் புகழ்பற்றி அவர் பலமுறை கேள்விப்பட்டிருந்தார். 372 ல் எப்ரேம் வாழ்ந்த பகுதிக்கருகில் மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். இவர் அம்மக்களை மீட்க அயராது உழைத்தார். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டாற்றினார். இப்பணிகளின் மிகுதியால் மிகவும் களைத்து போனார். தொடர்ந்து பணியாற்ற இவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தான் தங்கியிருந்த குகைக்குள் மெல்ல நகர்ந்து சென்றார். குகைக்குள் சென்றதுமே இறைவனடி சேர்ந்தார். இவர் ஓர் புகழ்மிக்க ஆசிரியர், தேன்சொட்டும் மறையுரையாளர், சிறந்த கவிஞர், விசுவாசத்தின் பாதுகாவலர், மறைநூலின் ஆழமான விளக்க உரையாளர் என்று இவர் வாழும்போதே, மக்கள் இவருக்கு புகழ் சூட்டினார்கள். இவர் சிரியன் ரீதியை சேர்ந்தவராக இருந்தபோதும் கூட "திருச்சபையின் மறைவல்லுநர்" என்ற பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே சூட்டப்பட்டது. திருவழிபாட்டில், திருப்பாக்களை சரளமாக புகுத்தும் பழக்கம் இவருக்கு இருந்ததால் இவரை "தூய ஆவியின் புல்லாங்குழல்" என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.
செபம்:
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மறைப்பணியாளர் மறைசாட்சி புனித ஜான் தெ பிரிட்டோ John de Britto SJ
இவர் புனித சவேரியாரைப் பின்பற்றி இயேசு சபையில் சேர்ந்தார். பின்னர் மறைப்பரப்பு பணிக்காக இந்திய நாட்டிற்குச் சென்றார். அங்கு பல சமயங்களின் மத்தியில் பலதரப்பட்ட மக்களிடையே மறைப்பணியை ஆற்றினார். சிறப்பாக 1692 ஆம் ஆண்டு ஏறக்குறைய 4000 இந்து மதத்தைச் சார்ந்தவர்களை மனந்திருப்பினார். அந்நாட்டில் வாழும், இந்தியத் துறவிகளைப் போலவே தன் வாழ்வையும் மாற்றிக்கொண்டு, கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக அநீதிகளை எதிர்த்துப் போரிட்டார். மக்கள் நெறி தவறா கிறிஸ்தவ வாழ்வை அறிவுறுத்தினார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற ஒருமைப்பாட்டுக் கற்பொழுக்கத்தை வலியுறுத்திப் போதித்தார். இதன் விளைவாக எதிரிகளால் பிடிக்கப்பட்டு, தனது 45 ஆம் வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
செபம்: திடம் அளிப்பவரே எம் இறைவா! புனித ஜான் தெ பிரிட்டோவிற்கு தளரா மனதையும், திடத்தையும் அளித்து உமது திருமறையை எம் பாரத நாட்டில் பரவச் செய்தீர். அவரது விழாவை சிறப்பிக்கும் நாங்கள் அவருடைய பேறுபலன்களையும் பரிந்துரைகளையும் பெற்று, அவரின் விசுவாசத்தை பின்பற்றி வாழ உமது வரம் தாரும்.

மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்பிரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
1741இல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.

நாளடைவில் இந்த டிலன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி கிறித்தவத்தை டிலனாய் அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி (Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.

இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறித்துவுக்காக தனது உயிரையும் கொடுக்க அணியமான தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார்.

அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர்.
புனிதர் பட்ட நடவடிக்கைகள்
தேவசகாயம் பிள்ளை கிறித்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) என்பவர் 1756இல் உரோமையில் திருத்தந்தையிடம் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.
பின்னர் 1993இல் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் முதல் படியாக இவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார்.

ஜூன் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார்.
கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில் தொம்மச்சன் என்பவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையும் துறவறத்தைத் தழுவியவர்கள் அல்ல, மாறாக பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மறைசாட்சியாளர் அக்குயிலினுஸ் Aquilinus
பாதுகாவல்: சுமை சுமப்பவர்கள்
இவர் கொலோனில் Köln மறைப்பணியாளராக பணிபுரிந்தார் என்று கூறப்படுகின்றது. இவர் தனது மறைப்பணி தொடர்பாக மிலானிற்கு செல்லும்போது கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவரின் உடல் லோரேன்சோ மாகியோரி Lorenzo Maggiore என்றழைக்கப்படும் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று அவ்வாலயம் அக்குயிலினோ என்றழைக்கப்படுகின்றது. சில ஆண்டுகள் கழித்து அவரின் புனித பொருட்கல் வூர்ட்ஸ்பூர்கிற்கு கொண்டுவரப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவரை பற்றிய மற்ற குறிப்புகள் அதிகம் அறியப்படவில்லை.
செபம்: என்றும் வாழும் தந்தையே! நீரே எம் தேடல், நீரே எம் வாழ்வு. நீரே எமக்கு எல்லாமுமானவர். மறைசாட்சிகளாக இம்மண்ணில் மடியும் ஆன்மாக்களை நீர் நினைவுகூரும். உம் தயவால் விண்ணக வாழ்வில் உமது முடிவில்லா பேரின்பத்தில் பங்குக்கொள்ள துணை செய்யும்.

சரகோசா நகர் மறைசாட்சி வின்செண்ட் Vinzenz von Saragossa
பாதுகாவல்: சரகோசா மறைமாவட்டம், மீனவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள்
சரகோசா என்னும் நகரத்து திருச்சபையின் திருத்தொண்டரான வின்செண்ட் தியோக்ளேசியன் கிறிஸ்துவர்களை வாட்டி வதைத்த காலத்தில் வாலன்சியா என்னுமிடத்தில் கொடிய வேதனைகளுக்கு ஆளானார். இருப்பினும் தனது மறைமாவட்ட ஆயர் அனுப்பிய கடிதத்தின் பேரில் கிறிஸ்துவுக்காக அனைத்து துன்பங்களையும் பொறுமையுடன் ஏற்றார். தியோக்ளேசியனின் படைவீரர்கள் இவரை மூச்சுவிட முடியாத அளவிற்கு அடித்து உதைத்தனர். உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு உடல் முழுவதையும் குத்திக் கிழித்தனர். இறுதியாக தலை முதல் கால் வரை காயம் உண்டாக்கி இரத்தத்தை வெளியேற்றினர். மரண தருவாயிலும் கடினமான, அளவில்லா வலியை ஏற்படுத்தினர். தோல்களை கூர்மையான ஊசிகொண்டு குத்தி கிழித்தனர். தங்களின் விருப்பப்படி அவரை அக்கொடியவர்கள் துன்புறுத்தியப்பின் கடலில் வீசி கொன்றனர்.
செபம்: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! மறைசாட்சியான புனித வின்செண்ட் தம் உடலை வருத்திய வேதனைகளையெல்லாம் உள்ளம் நிறைந்த உமது அன்பினால் வென்றார். இறப்பிலும் மேலான வலிமை வாய்ந்த அந்த அன்பை நாங்களும் பெற்றுக்கொள்ள உம்முடைய தூய ஆவியாரால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கில்டாரே நகர் துறவி பிரிஜிட்டா Brigitta von Kildare
இவர் பேட்ரிக் (Patrick) என்பவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார் என்று கூறப்படுகின்றது. இவர் தனது சிறுவயதிலிருந்தே பக்தியிலும், கிறிஸ்துவ விசுவாசத்திலும் சிறந்து விளங்கினார் என்று வரலாறு கூறுகின்றது. இவர் தனக்கு 14 வயது நடக்கும்போதே தன்னை துறவி போல நினைத்து, அவர்களைப் போலவே உடை உடுத்தி வாழ்ந்துள்ளார். சிறப்பாக இவர் தான் பிறந்த ஊரிலேயே, ஊரின் கடைப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த சிறிய குகை ஒன்றில் வாழ்ந்துள்ளார். அதன்பிறகு துறவிகளுக்கான துறவற இல்லம் ஒன்றையும் எழுப்பியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து ஆண் துறவிகளுக்கென்றும் துறவற இல்லம் ஒன்றை நிறுவியுள்ளார். இந்த இரு துறவற இல்லங்களும் அயர்லாந்தில் மிகப் புகழ்வாய்ந்து காணப்பட்டது. இவர் தன் வாழ்நாள் முழுவதும் இறைவனின் மகிமைக்காகப் பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் இறந்தபிறகு, இவர் பயன்படுத்திய பொருட்கள் பல ஐரோப்பா முழுவதிலும் இருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சிறப்பாக இவர் அணிந்த செருப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் அனைத்தும் துப்ளின் நகரில் (Dublin) உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
செபம்: என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! உம்மீது அளவில்லா அன்புக் கொண்டு, உமக்காகவே வாழ்ந்த பிரிஜிட்டாவைப் போல உமக்காக வாழ தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். தங்களின் சொல் செயல் சிந்தனைகளில் உம்மை பற்றிகொண்டு என்றும் உமக்காக வாழும் பேற்றைத் தந்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்
பாதுகாவல் : அயர்லாந்து, உணவு, குழந்தைகள், வீட்டு விலங்குகள், திடீர் விபத்துகளிலிருந்து

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
April 23 - பறவை நாகத்தை வென்ற இளம்வீரர் – புனித ஜார்ஜ்
"மனிதர்கள் மத்தியில் மதிப்பும் வணக்கமும் பெற்றுள்ள இவரைக் குறித்து சொல்லப்பட்டுள்ள பல வீர,தீரச் செயல்கள் இறைவனுக்கு மட்டுமே தெரியும்" என்று திருத்தந்தை ஒருவர், ஓர் இளைஞனைப் பற்றிக் கூறியுள்ளார்.
ஆம், 5ம் நூற்றாண்டில் திருஅவைத் தலைவராக இருந்த புனித முதலாம் ஜெலாசியுஸ் அவர்கள், 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜார்ஜ் என்ற இளைஞனைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
படைத்தளபதியின் உடையணிந்து, குதிரை மீது அமர்ந்திருக்கும் ஓர் இளைஞன், கீழே நெளியும் ஒரு பறவை நாகத்தை ஈட்டி கொண்டு தாக்குவதைப் போல் அமைந்துள்ள புனித ஜார்ஜ் அவர்களின் ஓவியம்,பல கதைகளுக்கு ஊற்றாக அமைந்துள்ளது. ஒரு சில ஓவியங்களில், இவ்விளைஞருக்கும், பறவை நாகத்திற்கும் பின்புலத்தில், ஓர் இளம்பெண் இருப்பது போலவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பெண்,உண்மைக்கு, அல்லது வளர்ந்துவரும் கிறிஸ்தவ மறைக்கு ஓர் அடையாளம் என்பது பரவலான கருத்து.
பாலஸ்தீன நாட்டில், கிரேக்க உயர்குடியில், 275 அல்லது, 285ம் ஆண்டு பிறந்தவர் ஜார்ஜ். இளவயதில்,உரோமையப் பேரரசன் Diocletian படையில் இணைந்தார். மன்னன் Diocletian கிறிஸ்தவர்களை வேட்டையாடத் துவங்கியபோது, அதை வன்மையாகக் கண்டனம் செய்த இளம்வீரர் ஜார்ஜ், தானும் ஒரு கிறிஸ்தவர் என்பதை பகிரங்கமாக அறிவித்தார்.
மன்னன் Diocletian, அவருக்கு மரணதண்டனை வழங்கியதும், இளையவர் ஜார்ஜ், தன்னிடம் இருந்த அனைத்துச் செல்வங்களையும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, தன் மரணத்தை எதிர்கொண்டார். மிகக் கொடூரமானச் சித்திரவதைகளுக்கு ஜார்ஜ் உள்ளாக்கப்பட்டாலும், அவர் உயிருடன் இருந்ததைக் கண்ட மன்னன், இறுதியில் அவரது தலையை வெட்டிக் கொல்லுமாறு ஆணையிட்டார்.
அதன்படி, 303ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி, 30 வயது நிரம்பாத இளம்வீரர் ஜார்ஜ், கிறிஸ்துவுக்காக, தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார். கொடூரச் சித்திரவதைகள் மத்தியிலும், இளைஞர் ஜார்ஜ் காட்டிய துணிவும்,அமைதியும் சூழ இருந்தவர்கள் பலரைப் பாதித்தன. அவர்களில், உரோமைய அரசி அலெக்சாண்ட்ராவும்,உரோமையக் கடவுள்களுக்கு வழிபாடுகள் நடத்திய அரச குருக்களில் ஒருவரான அத்தனேசியஸ் அவர்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.
திருஅவை வரலாற்றில், புகழ்பெற்ற புனிதர்களில் ஒருவராக ஜார்ஜ் கருதப்படுகிறார். ஜார்ஜியா,இங்கிலாந்து, எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உட்பட, 20 நாடுகளும், பார்சலோனா, மாஸ்கோ, ரியோ டி ஜனெய்ரோ உட்பட, 24 பெருநகரங்களும் புனித ஜார்ஜ் அவர்களை, தங்கள் காவலராகக் கொண்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருமுழுக்கு பெற்றபோது, புனித ஜார்ஜ் அவர்களின் பெயரை ஏற்று,Jorge Mario என்று அழைக்கப்பட்டார். எனவே, ஏப்ரல் 23, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நாம விழாவைக் கொண்டாடுகிறார்.

CCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
புனித பேதுரு, புனித பவுல் (St.Peter and St.Paul)
புனித பேதுரு:
சீமோன் என்கிற இவருடைய பெயரை நம் ஆண்டவர் மாற்றி "பாறை" என்னும் பொருள் தரும் பேதுரு என்னும் பெயரை சூட்டினார். தமது வாழ்வின் முக்கியமான கட்டங்களிலும் பல புதுமைகள் செய்யும்போதும் ஆண்டவர் இவரை தம் அருகில் வைத்திருந்தார். அச்சத்தினால் நம் ஆண்டவரை மறுதலித்த பாவத்திற்காக பேதுரு இறுதி மட்டும் மனம் கசிந்து அழுதார். நம் ஆண்டவர் உயிர்தெழுந்த பின் காட்சி கொடுத்த பொழுது "என்னை அன்பு செய்கிறாயா?" என்று மும்முறை கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மும்முறை மறுதலித்ததற்காக மும்முறை கழுவாய் முயற்சிகள் செய்யும்படி தூண்டினார். தூய ஆவியை அடைந்தபின் ஆயிரக்கணக்கான மக்களை பேதுரு மனந்திருப்பினார். கணக்கற்ற நோயாளிகளை நலமடைய செய்தார்.
நீரோ என்ற இரத்தவெறி பிடித்த மன்னன் காலத்தில், புனித பேதுரு உரோமையில் சித்ரவதைக்கு உள்ளானார். அவர் சிறையில் தள்ளப்பட்ட இடத்தில் புனித பேதுருவின் சிறைவாழ்வின் நினைவாக ஓர் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. இவர் சிலுவை சாவு அடைந்தார் என்று 255 ல் டெர்டல்லியன்(Derdalien) குறிப்பிடுகின்றார். ஆரிஜன் என்று மறைவல்லுநரை மேற்கோள்காட்டி பேதுருவின் விருப்பப்படி சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார் என்று யூசிபியுஸ்(Yousibius) குறிப்பிடுகின்றார். நீரோவின் தோட்டத்தில்தான் பேதுரு சிறைப்பட்டு இருந்ததாகவும், அங்குதான் பேதுருவும் இன்னும் கிறிஸ்தவர் பலரும் பலவிதமாக சித்ரவதைகளுக்கும் உள்ளானார்கள் என்று பாரம்பரியம் கூறுகின்றது.
புனித பவுல்:
இறைவன் மட்டுமே வீழ்ச்சியுற்ற மனிதனை மீட்க இயலும். மனிதனின் முயற்சி எத்தகையதாக இருந்தாலும், சட்டங்களை மிகக் கண்ணுங்கருத்துமாக கடைபிடித்தாலும் பாவத்தினின்றும், அலகையினின்றும், சாவினின்றும் விடுதலை அடைய மனிதன் தன்னை முழுவதும் இயேசுவின் அருள் ஆற்றலுக்கு ஒப்படைத்தாக வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை இவரிடம் வேரூன்றியிருந்தது.
தமஸ்கு நகருக்கருகே பவுல் கண்ட காட்சியில் உயிர்த்த இயேசுவுடன் கலந்துரையாடியது, அவரது வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு, அவர் கிறிஸ்துவுக்காக உழைத்து, உயிர்த்த கிறிஸ்துவின் திருத்தூதர் ஆனார். பலவிதமான எதிர்ப்புகள், அவமானங்கள், சாட்டையடிகள், கல்லடிகள், ஒடுக்கப்பட்ட நிலை, சிறைவாசம் இவை போன்ற இன்னும் பல கொடுமைகள் இவரை மேலும் மேலும் திருச்சபையின் அசையாத தூணாக்கியது. இவருடைய கடிதங்களில் காணப்படும் சில அரிய தொடர்கள், கிறிஸ்துவின்மீது இவர் கொண்டிருந்த பற்றுறுதியை காட்டுகின்றது. இவர் எழுதிய திருமுகங்களில் "கிறிஸ்துவில்" என்ற சொல் ஏறக்குறைய 50 முறை வருகின்றது. இது அவரின் ஆன்மீகத்தையும், அப்போஸ்தலிக்க வாழ்வையும், வேத கலாபனையையும், பணிவாழ்வையும் வெளிப்படையாக காட்டுகின்றது. "எல்லோர்க்கும் எல்லாம் ஆனேன்" என்று இவர் குறிப்பிடுவது, நற்செய்திக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் எவரிடமும் கனிவுடனும், பாசத்துடனும் நடந்து, நான் கிறிஸ்துவை மாதிரியாக தேர்ந்துகொண்டதுபோல, என்னையும் உங்கல் மாதிரியாக எடுத்துகொள்ளுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தூதரான புனித பேதுரு, பவுல் இவர்களை மேம்படுத்த இந்நாளை தந்ததற்காக நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உம் மகன் வழியாக உம்மை வழிபட எங்களுக்கு முதன்முறையாக கற்றுத்தந்தனர். உமது திருச்சபை அவர்களது போதனையின்படி வாழ வரமருள்வீராக.
புனித பேதுரு:
சீமோன் என்கிற இவருடைய பெயரை நம் ஆண்டவர் மாற்றி "பாறை" என்னும் பொருள் தரும் பேதுரு என்னும் பெயரை சூட்டினார். தமது வாழ்வின் முக்கியமான கட்டங்களிலும் பல புதுமைகள் செய்யும்போதும் ஆண்டவர் இவரை தம் அருகில் வைத்திருந்தார். அச்சத்தினால் நம் ஆண்டவரை மறுதலித்த பாவத்திற்காக பேதுரு இறுதி மட்டும் மனம் கசிந்து அழுதார். நம் ஆண்டவர் உயிர்தெழுந்த பின் காட்சி கொடுத்த பொழுது "என்னை அன்பு செய்கிறாயா?" என்று மும்முறை கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மும்முறை மறுதலித்ததற்காக மும்முறை கழுவாய் முயற்சிகள் செய்யும்படி தூண்டினார். தூய ஆவியை அடைந்தபின் ஆயிரக்கணக்கான மக்களை பேதுரு மனந்திருப்பினார். கணக்கற்ற நோயாளிகளை நலமடைய செய்தார்.
நீரோ என்ற இரத்தவெறி பிடித்த மன்னன் காலத்தில், புனித பேதுரு உரோமையில் சித்ரவதைக்கு உள்ளானார். அவர் சிறையில் தள்ளப்பட்ட இடத்தில் புனித பேதுருவின் சிறைவாழ்வின் நினைவாக ஓர் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. இவர் சிலுவை சாவு அடைந்தார் என்று 255 ல் டெர்டல்லியன்(Derdalien) குறிப்பிடுகின்றார். ஆரிஜன் என்று மறைவல்லுநரை மேற்கோள்காட்டி பேதுருவின் விருப்பப்படி சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார் என்று யூசிபியுஸ்(Yousibius) குறிப்பிடுகின்றார். நீரோவின் தோட்டத்தில்தான் பேதுரு சிறைப்பட்டு இருந்ததாகவும், அங்குதான் பேதுருவும் இன்னும் கிறிஸ்தவர் பலரும் பலவிதமாக சித்ரவதைகளுக்கும் உள்ளானார்கள் என்று பாரம்பரியம் கூறுகின்றது.
புனித பவுல்:
இறைவன் மட்டுமே வீழ்ச்சியுற்ற மனிதனை மீட்க இயலும். மனிதனின் முயற்சி எத்தகையதாக இருந்தாலும், சட்டங்களை மிகக் கண்ணுங்கருத்துமாக கடைபிடித்தாலும் பாவத்தினின்றும், அலகையினின்றும், சாவினின்றும் விடுதலை அடைய மனிதன் தன்னை முழுவதும் இயேசுவின் அருள் ஆற்றலுக்கு ஒப்படைத்தாக வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை இவரிடம் வேரூன்றியிருந்தது.
தமஸ்கு நகருக்கருகே பவுல் கண்ட காட்சியில் உயிர்த்த இயேசுவுடன் கலந்துரையாடியது, அவரது வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு, அவர் கிறிஸ்துவுக்காக உழைத்து, உயிர்த்த கிறிஸ்துவின் திருத்தூதர் ஆனார். பலவிதமான எதிர்ப்புகள், அவமானங்கள், சாட்டையடிகள், கல்லடிகள், ஒடுக்கப்பட்ட நிலை, சிறைவாசம் இவை போன்ற இன்னும் பல கொடுமைகள் இவரை மேலும் மேலும் திருச்சபையின் அசையாத தூணாக்கியது. இவருடைய கடிதங்களில் காணப்படும் சில அரிய தொடர்கள், கிறிஸ்துவின்மீது இவர் கொண்டிருந்த பற்றுறுதியை காட்டுகின்றது. இவர் எழுதிய திருமுகங்களில் "கிறிஸ்துவில்" என்ற சொல் ஏறக்குறைய 50 முறை வருகின்றது. இது அவரின் ஆன்மீகத்தையும், அப்போஸ்தலிக்க வாழ்வையும், வேத கலாபனையையும், பணிவாழ்வையும் வெளிப்படையாக காட்டுகின்றது. "எல்லோர்க்கும் எல்லாம் ஆனேன்" என்று இவர் குறிப்பிடுவது, நற்செய்திக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் எவரிடமும் கனிவுடனும், பாசத்துடனும் நடந்து, நான் கிறிஸ்துவை மாதிரியாக தேர்ந்துகொண்டதுபோல, என்னையும் உங்கல் மாதிரியாக எடுத்துகொள்ளுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தூதரான புனித பேதுரு, பவுல் இவர்களை மேம்படுத்த இந்நாளை தந்ததற்காக நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உம் மகன் வழியாக உம்மை வழிபட எங்களுக்கு முதன்முறையாக கற்றுத்தந்தனர். உமது திருச்சபை அவர்களது போதனையின்படி வாழ வரமருள்வீராக.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித வால்ட்ரூட் (St.Waltrude)
656 ல் ஓர் துறவியாக முடிவு செய்து துறவியானார். இவர் வாழ்ந்த அக்காலத்தில் அரசர்கள் கைதிகளை மலைகளுக்கு அனுப்பி தண்டனை கொடுத்தார்கள். கைதிகள் தங்கள் வாழ்நாட்களை மலைபகுதிகளிலே கழிக்க வேண்டியதாக இருந்தது. அப்போது வால்ட்ரூட் பெல்ஜியத்தில் மலைகளில் வாழ்ந்த கைதிகளுக்காக போராடி, உதவி செய்து வந்தார். நாளடைவில் கைதிகளை கொண்டு, வால்ட்ரூட் தானே சொந்தமாக, தனது பெயரிலேயே ஓர் சபையை நிறுவினார். பெல்ஜியத்திலுள்ள மோன்சில் புனித வால்ட்ரூட் சபை உள்ளது.
688 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் வால்ட்ரூட் பெல்ஜியத்திலுள்ள மோன்ஸ் (Mons) மலையில் இறந்தார். பெல்ஜியத்தில் புனித வால்ட்ரூட் மலையில் இவர் பெயரில் பேராலயமும், கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பெல்ஜிய மலைகளில் இன்றுவரை புனித வால்ட்ரூட் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் மலைகளின் பாதுகாவலர் என்றழைக்கப்படுகின்றார்.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! மலைகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வதியும். விஷ பூச்சிகளிடமிருந்து காத்து வழிநடத்தியருளும். இயற்கையின் வழியாக உம்மைப் புகழ்ந்திட வரம் தாரும்.
656 ல் ஓர் துறவியாக முடிவு செய்து துறவியானார். இவர் வாழ்ந்த அக்காலத்தில் அரசர்கள் கைதிகளை மலைகளுக்கு அனுப்பி தண்டனை கொடுத்தார்கள். கைதிகள் தங்கள் வாழ்நாட்களை மலைபகுதிகளிலே கழிக்க வேண்டியதாக இருந்தது. அப்போது வால்ட்ரூட் பெல்ஜியத்தில் மலைகளில் வாழ்ந்த கைதிகளுக்காக போராடி, உதவி செய்து வந்தார். நாளடைவில் கைதிகளை கொண்டு, வால்ட்ரூட் தானே சொந்தமாக, தனது பெயரிலேயே ஓர் சபையை நிறுவினார். பெல்ஜியத்திலுள்ள மோன்சில் புனித வால்ட்ரூட் சபை உள்ளது.
688 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் வால்ட்ரூட் பெல்ஜியத்திலுள்ள மோன்ஸ் (Mons) மலையில் இறந்தார். பெல்ஜியத்தில் புனித வால்ட்ரூட் மலையில் இவர் பெயரில் பேராலயமும், கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பெல்ஜிய மலைகளில் இன்றுவரை புனித வால்ட்ரூட் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் மலைகளின் பாதுகாவலர் என்றழைக்கப்படுகின்றார்.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! மலைகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வதியும். விஷ பூச்சிகளிடமிருந்து காத்து வழிநடத்தியருளும். இயற்கையின் வழியாக உம்மைப் புகழ்ந்திட வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ரீட்டா.(St.Rita) - குடும்பத்தலைவி, துறவி(Widow, nun)
ரீட்டா கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்பிரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்துவந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள். ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக்கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்துகொள்ள விரும்பினார்.
ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்கவேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா. உடனே பெற்றோர் பவுலோ பெர்டினாண்டோ என்பவருக்கு ரீட்டாவைத் திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அய்யோ பாவம் ரீட்டா! கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூரக்குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சாநெஞ்சத்துடன் அனைத்து துன்பக்கலனையும் ஏற்றுக்கொண்டார். கணவர் மனம்மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.
பின்னர் இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழித்தவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார். இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார்.
இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனமாறவில்லையென்றால் இறைவனை அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.
ரீட்டா இவர்களின் இறப்பிற்குப்பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ அறமுயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார். ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர்.
அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள். அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார்.
ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்துக்கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் இவரிடமிருந்து அருள்பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ஆம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்டபிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.
ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர்பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத்தணிக்கையில் இடம்பெற்றுள்ளது.
செபம்:
தந்தையே நீர் விரும்பினால் இத்துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும் என்று ஜெபித்த இயேசுவே! உம் பெயரை இவ்வுலகில் நிலைநாட்ட மறைசாட்சிகளாய் மரித்தவர்களை நீர் கருணை கண்கொண்டு நோக்கியருளும். மரித்த ஒவ்வொரு ஆன்மாக்களும் இம்மண்ணில் வெற்றியடைய உம் வரம் தாரும்.
தந்தையே நீர் விரும்பினால் இத்துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும் என்று ஜெபித்த இயேசுவே! உம் பெயரை இவ்வுலகில் நிலைநாட்ட மறைசாட்சிகளாய் மரித்தவர்களை நீர் கருணை கண்கொண்டு நோக்கியருளும். மரித்த ஒவ்வொரு ஆன்மாக்களும் இம்மண்ணில் வெற்றியடைய உம் வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித எப்ரேம் (St.Ephrem) - மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்
இவரின் பெற்றோர்கள் பற்றியும், இவரது குருத்துவத்தைப்பற்றியும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது. கிறிஸ்துவின் ஒளிபெறாத பெற்றோர் என்று கூறப்படினும், எப்ரேம், "உண்மையின் வழியில் பிறந்தவன் நான்" கூறுவதிலிருந்து, இவரின் பெற்றோர் ஞான ஒளி பெற்றவர்கள் என்று நம்ப இடமுண்டு, மேலும் இவர் தியோக்கான் என்று அழைக்கப்பட்டாலும், குருத்துவ மகிமை பெற்றிருந்ததாக அவர் எழுதியவற்றிலிருந்து தெரிகிறது. இவர் தமது 18 ஆம் வயதில் திருமுழுக்குப் பெற்றார். அன்று முதல் நிசிபிஸ் நகர் ஆயர் புனித ஜேக்கப்பின் கண்காணிப்பில் இருந்தார். ஆயர் 325 ல் நிசேயா என்ற பொது சங்கத்திற்கு போகும்போது எப்ரேம்மையும் தன் செயலராக அழைத்து சென்றார். அப்போது ஆயர் இறந்து போகவே நிசிபிசிலேயே தங்கினார். அங்கே பெர்சியர்கள் படையெடுத்து வந்த வேத கலாபனையை பாடல்களாக தொகுத்தார். பின்னர் 350 ஆம் ஆண்டில் திருச்சபைக்கு இருந்த ஆபத்து நீங்கியது. வேதகலாபனை போரில் பெர்சியர் தோல்வி அடைந்தனர். 13 ஆண்டுகளுக்குப்பின் மன்னன் ஜோவியன் ஆட்சிக்காலத்தில் அமைதியின் பயனாக, நிசிபிஸ் நகரை பெர்சியாவுக்கு கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த எப்ரேம் எடெஸ்ஸாவுக்கு அருகில் தனிமையை நாடிச்சென்று ஒரு குகையில் நாட்களை செலவழித்தார். அங்கு கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். திருவழிபாட்டில் மக்களின் மனதை இறைவன்பால் எழுப்பும் ஆற்றல் திருப்பாடல்களுக்கு நிறையவே உள்ளது என்பதை இவர் உணர்ந்தார். திருவழிபாட்டில் "திருப்பாடல்களின் தந்தை" என்ற பட்டம் இவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டது. இவர் பெண்களின் பாடற்குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறுதிவரை தியாக்கோனாகவே இருந்தார். இவர் பல நூல்கள் எழுதினார். அனைத்திலுமே தான் ஓர் குருத்துவத்தை தேர்ந்துகொண்டதாகவே எழுதியுள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும் " இவருடைய நாட்களில் மக்கள் எப்படி விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்து வந்தனர். திருச்சபையில் எத்தகைய வழிபாட்டு முறைகள் நிலவி வந்தன என்பதை காட்டுகின்றது. அதேபோல் அன்னை மரியா எத்தகைய மாசு மறுவுமின்றி உற்பவித்தவர் என்று இவர் குறிப்பிடும்போது, அவரது நாட்களில் இவ்வுண்மையை விசுவாசிகள் தெரிந்து வைத்திருந்தனர். தாழ்ச்சியின் பொருட்டு, தமது அடக்க சடங்கின்போது, தம் உடலுக்கு தூபங்காட்ட வேண்டாம். இறைவனுக்கு மட்டுமே நறுமணத் தூபம் உரியது என்றும், ஆன்ம சாந்திக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது மட்டுமே சிறந்தது என்று கூறினார்.
எப்ரேம் 370 ஆம் ஆண்டில் கப்படோசியாவில் இருந்த புனித பாசிலை சந்தித்தார். ஏற்கெனவே பசிலியாரின் புகழ்பற்றி அவர் பலமுறை கேள்விப்பட்டிருந்தார். 372 ல் எப்ரேம் வாழ்ந்த பகுதிக்கருகில் மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். இவர் அம்மக்களை மீட்க அயராது உழைத்தார். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டாற்றினார். இப்பணிகளின் மிகுதியால் மிகவும் களைத்து போனார். தொடர்ந்து பணியாற்ற இவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தான் தங்கியிருந்த குகைக்குள் மெல்ல நகர்ந்து சென்றார். குகைக்குள் சென்றதுமே இறைவனடி சேர்ந்தார். இவர் ஓர் புகழ்மிக்க ஆசிரியர், தேன்சொட்டும் மறையுரையாளர், சிறந்த கவிஞர், விசுவாசத்தின் பாதுகாவலர், மறைநூலின் ஆழமான விளக்க உரையாளர் என்று இவர் வாழும்போதே, மக்கள் இவருக்கு புகழ் சூட்டினார்கள். இவர் சிரியன் ரீதியை சேர்ந்தவராக இருந்தபோதும் கூட "திருச்சபையின் மறைவல்லுநர்" என்ற பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே சூட்டப்பட்டது. திருவழிபாட்டில், திருப்பாக்களை சரளமாக புகுத்தும் பழக்கம் இவருக்கு இருந்ததால் இவரை "தூய ஆவியின் புல்லாங்குழல்" என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
August 9 – St. Juana Cipitria Barriola.
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை'
1845ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் பிறந்த Juana Cipitria Barriola அவர்கள், வறுமையில் வாடிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற, சிறுவயதிலேயே பிற இல்லங்களில் பணி செய்தார். Salamanca என்ற நகரில் வேலை தேடிச் சென்ற இவர், அந்நகரில் நிலவிய வறுமையை ஒழிக்க உறுதி பூண்டார்.
"நான் கடவுளுக்கு மட்டுமே உரியவள்." என்று அடிக்கடி கூறி வந்த Juana அவர்கள், 23ம் வயதில் இறை அழைப்பை ஏற்றார். 1871ம் ஆண்டு, 'இயேசுவின் புதல்வியர்' என்று அழைக்கப்படும் துறவு சபையை ஆரம்பித்தார். இயேசுவின் கேன்டிடா மரியா (Candida Maria de Jesus) என்ற பெயருடன் தன் அருள் பணிகளைச் செய்தார்.
Juana அவர்கள் ஆரம்பித்தத் துறவுச் சபை, புனித இலயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இத்துறவு சபை, 1902ம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் அங்கீகாரம் பெற்றது. வறுமைப்பட்ட பெண் குழந்தைகளின் கல்வியில் இத்துறவுச் சபை அதிகம் ஈடுபட்டது.
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் பணிபுரிந்த Juana அவர்கள், 1912ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவரது 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1996ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். 2010ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் கேன்டிடா மரியா அவர்களைப் புனிதரென அறிவித்தார்.

புனித இரேனியுஸ் (St. Irenaeus) - ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி
இரேனியுஸ் என்ற சொல்லுக்கு "அமைதி விரும்பி" என்பது பொருள். இவர் தம் பெயருக்கேற்ப அமைதியின் மூலம் பல அருஞ்செயல்களை நிலைநாட்டி திருச்சபைக்கு பேரும் புகழும் தேடித்தந்தார். இவர் 2 ஆம் நூற்றாண்டின் சிறப்பான மறைவல்லுநர். புனித போலிக்கார்ப்பின் சீடர் லயன்ஸ்(Lions) நகர்புறத்துக் கிறிஸ்தவர்களின் ஆயராயிருந்தார். இவர்களின் பொருட்டு ஒருமுறை உரோமை சென்றார். பிறகு ஒரு முறை சிறிய ஆசியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பரிந்துரைக்கவும் திருத்தந்தையை சந்திக்க சென்றார்.
இவர் ஆற்றிய திறமைமிக்க பெரும்பணி நாஸ்டிக் (Gnostic) என்று சொல்லப்பட்ட தப்பறையை தம் பெயருக்கே உரிய அமைதியான முறையில் எடுத்துரைத்ததாகும். தொடக்கத்தில் உருவமற்ற பொருள் ஒன்று இருந்தது. இதிலிருந்தே தெய்வ தன்மையுடனிருந்த ஒருவரின் குறுக்கீட்டால் இவ்வுலகம் தோன்றியது என்பது இந்த தப்பறையின் சாரமாகும். 177 ஆம் ஆண்டு கொடுங்கோல் மன்னனும் மெய்மறை பகைவனுமான மார்க் அவுரேலியஸ்(Aurelias) ஆட்சியில் பயங்கரமான வேதகலாபனை தோன்றியது. இச்சூழலில்தான், சிறையில் அகப்பட்ட குருக்கள் சிலர், சிறையில் அகப்படாத இவரை உரோமை நகருக்கு அனுப்பினார்கள். பிறகு இருவரும் பாப்பரசரிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறினர். இவர் உரோமையிலிருந்து வருவதற்குள் ஆயரான புனித போட்டினுசும்,(Botinus) அவரோடு குருக்கள் பலரும் வேதத்திற்காக தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சி பகர்ந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தனர். இச்சூழலில் இவர் திரும்பி வரவே ஆயராக நியமிக்கப்பட்டார். 24 ஆண்டுகள் ஆயராக பணியாற்றி பலரை மனந்திருப்பினார். பல மெய்மறை நூல்களை எழுதினார். இதன் வழியாகவும் பலரை இறைவன் பால் ஈர்த்தார்.
செபம்:
வழிகாட்டும் தெய்வமே எம் இறைவா! திருச்சபையையும், கிறிஸ்துவத்தையும் இவ்வுலகில் நிலைநாட்ட புனித இரேனியுஸ் அரும்பாடுபட்டுள்ளார். நீர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தியுள்ளீர். இன்றைய எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினரையும் நீர் ஆசீர்வதியும். உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த தேவையான அருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB
இவர் உரோமையர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சகோதரர் புனித இசிதோர் Isidor. லேயாண்டர் புனித பெனடிக்ட சபையில் சேர்ந்து குருவானார். இவர் அரசர் மகன் ஒருவனுக்கு ஆலோசகராக இருந்தார். அரசரின் மகனின் உதவியுடன், அந்நாடு முழுவதும் விசுவாசத்தை பரப்பினார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளில் இறைவார்த்தையை எடுத்துரைத்தார். பிறகு திருத்தந்தை பெரிய கிரகோரி அவர்களின் நட்பைப் பெற்றார்.
இவர் ஏறக்குறைய 583 ஆம் ஆண்டில் செவிலா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் தன் மறைமாவட்ட மக்களை கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவைப்பற்றி போதித்தார்.
செபம்:
உலகை படைத்து பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! உம்மை இவ்வுலகில் பறைசாற்ற, பலவிதங்களில் பணியாற்றிய உம் இறையடியார்களை நினைவுகூறும். உமக்கெதிராக செயல்படும் மக்களை ஆசீர்வதியும். உம் மக்களை நீர் ஆசீர்வதியும். தூய ஆவியால் நிரப்பியருளும். உம்மேல் அன்பும் அக்கறையும் கொண்டு வாழச் செய்தருளும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித பிலிப்புநேரி(St. Philip Neri)
இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம் வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோம் நகர் சென்றார். அங்கு இவர் வேதக்கலை, தத்துவக்கலையைப் பயின்றார். அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியாரின் புதைக்குழி வளாகத்தில் தங்கினார். அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர் தெரு வழியாக நடந்துசெல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இனங்கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளினாலும் அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.
பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவர்களை ஒருங்கிணைத்து, திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை இறைவன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக்கவும் வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார். அப்போது இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவதை நாட பணித்தார். பின்னர் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 33 ஆண்டுகள் ஆரட்டரி(Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து நடத்தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அதன்பிறகு இக்குழுவை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ் செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார். இன்றுவரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழிலாளர் பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும் வந்த வண்ணமாய் இருந்தனர். பல குருக்களும், கர்தினால்களும் இவரது ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார். இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின் அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டார். பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம், அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.
இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு, ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும் மறவாமல் ஜெபிப்பார்.
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! திவ்விய நற்கருணை பக்தியை வளர்த்து, உம்மீது பற்றுகொள்ளசெய்த புனித பிலிப்புநேரி போல, நாள்தோறும் திவ்விய நற்கருணையின் வழியாக உம்மைப்பற்றி, எல்லோர்க்கும் எல்லாமுமாக வாழ்ந்து, உம்மை எங்கள் வாழ்வில் பிரதிபலிக்க எமக்கு உமதருளை தந்தருளும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித நார்பெர்ட் (St. Norbert) - ஆயர், செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பாதுகாவலர்
இவர் அரச குலத்தில் தோன்றியவர். ஆழமான அறிவுத்திறமை உடையவர். ஆழ்ந்த தெய்வபக்தியின் காரணமாக இளமையிலேயே குருத்துவத்தை விரும்பினார். ஆனால் இவர் இளைஞரானதும் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை அனுபவித்ததால், குருவாகும் ஆசை போய்விட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மேல் ஏறி வேறு ஊருக்கு செல்லும்போது, எதிர்பாராத விதமாக புயல்காற்றும், இடிமின்னலும் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே, குதிரை நிலை தடுமாறி, அவரை கீழே தள்ளியது. அப்போது அவர் ஆண்டவரை நோக்கி, "நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்?" என்று கேட்டு கதறி அழுதார். "தீமையை நீக்கு; நன்மை செய்ய புறப்படு; அமைதியைத் தேடி கண்டுபிடி" என்று உடனே ஓர் குரல் கேட்டது. அதன்பின் அவர், புனித பவுலைப் போல மனம் மாறினார். தன் வாழ்நாட்களை தேவ ஊழியத்தில் செலவழிக்க உறுதி பூண்டார். முறையான பயிற்சி பெற்று குருப்பட்டம் பெற்றார். தன் செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். கடுந்தவம் புரிந்து, உபவாசம் இருந்து புனிதராக வாழ்ந்தார். இறை தூண்டுதலால் ஓர் துறவற சபையைத் தொடங்கினார். இவர் ஆண்ட்வெர்ப் (Andwerf) என்ற நகரின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில் தவறான பாதையில் வாழ்ந்த அந்நகர் மக்களை அவர் பல வழிகளில் நல்வழிப்படுத்தினார். அதன்பின் அவர் மாக்டபர்க் (Makdeberg) என்ற நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே இருந்த பல ஊழல்களை நீக்கினார்.
பின்னர் ஜெர்மன் நாட்டு அரசர் லோத்தேர் (Lothar) என்பவருக்கு ஆலோசகராக பணியாற்றினார். மாக்டபர்க் நகரின் பேராயராக நியமிக்கப்பட்டபின், அந்நகருக்கு முதன்முறையாக சென்றபோது, தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றிப் பேராலயத்திற்குள் நுழைந்தார். பின்னர் பேராயரின் இல்லத்திற்குள் நுழைந்தபோது, வாயிற்காப்போன் இவர் யாரென்று தெரியாமல், உள்ளே நுழைய அனுமதி தர மறுத்தார். ஏனெனில் அவர் ஓர் ஏழையைப்போல தோற்றமளித்தார். ஆயர் வாயிற் காப்போரை நோக்கி, உண்மையில் நீதான் என்னை புரிந்துக்கொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி, இந்த இல்லத்திற்கு வரக்கட்டாயப்படுத்துகிறார்கள். நானோ தகுதியற்றவன், வறியவன் என்றார். பின்னர் வாயிற்காப்போன் தன் தவறை உணர்ந்து புனிதரிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆயர் நார்பெர்ட் ஏற்படுத்திய சபை "நார்பெர்டைன்" என்று அழைக்கப்படுகின்றது. இவர் திவ்விய நற்கருணை மீது தனி பெரும் பக்தி கொண்டிருந்தார். இப்பக்தியை இத்துறவற சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். இவர் இறந்த மறு நூற்றாண்டில் இவரது சபை 500 ஆக பெருகியது. பின்னர் பெண்களுக்கென்றும் ஓர் சபை நிறுவப்பட்டது. இதில் 3ஆம் சபையினரும் உள்ளனர்.
செபம்:
அன்பே உருவான இறைவா! ஆடம்பர வாழ்வில் தன் நாட்களை கழித்து, உம்மை அறியாமல் இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் நீர் உமது கருணை கண்கொண்டு பாரும். புனித நார்பெர்டைப்போல மனந்திரும்பி, உமக்கு சான்று புரியும் வாழ்வு வாழ, நீர் உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மறைசாட்சி ஆகத்தா Agatha
இவர் ஓர் சிறந்த பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இவரை, ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவராக வளர்த்தனர். பிறப்பிலிருந்தே மிக அழகுவாய்ந்த பெண்ணாக இருந்தார். இவர் இறைவனின் மேல் அளவுகடந்த பக்தி கொண்டவராக இருந்ததால் 30 நாட்கள் பகைவர்களால் மறைத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டார். தனது விசுவாச வாழ்வில், பல கொடுமைகளின் மத்தியிலும் சிறந்தவராக திகழ்ந்தார். இதனால் இன்னும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.
இவர் இன்னும் அதிகமாக இறைவனைப் பற்றிக்கொண்டதால் வெடிகள் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். பின்னர் மார்பு அறுக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டார். அத்துடன் நெருப்பினால் சுடப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்பட்டார். பல உடைந்த பொருட்களால் உடல் முழுவதும் அகோரமாக கிழிக்கப்பட்டார். இவர் அனைத்துத் துன்பங்களையும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ஏராளமான வேண்டல்களோடும் தன் துன்பங்களைக் கடவுளுக்காக அர்ப்பணித்தார்.
செபம்:
தூய்மைக்கெல்லாம் ஊற்றாம் எம் இறைவா! கன்னியும் மறைசாட்சியுமான புனித ஆகத்தா, தனது தூய வாழ்வாலும் வீரமுள்ள மறைசாட்சியத்தாலும், உமது பார்வையில் மிக மதிப்புக்குரியவரானார். அவரின் பரிந்துரையால் எங்களின் பாவங்களை மன்னித்து, எம்மை உம்மோடு இணைத்துக்கொள்ள வரமருளும்.

No comments:
Post a Comment